ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப் போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற் போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.
|
1
|
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள வருந்தன்மை யளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.
|
2
|
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.
|
3
|
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் சேவடி சேரல் செயலறல் தானே.
|
4
|
உச்சியுங் காலையு மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.
|
5
|
Go to top |
இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.
|
6
|
இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர் விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
|
7
|
மனபவ னங்களை மூலத்தின் மாற்றி அநித உடல்பூத மாக்கி யகற்றிப் புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத் தனிஉறு பூசை சதாசிவற் காமே.
|
8
|
பகலு மிரவும் பயில்கின்ற பூசை இயல்புடை யீசற் கிணைமல ராகா பகலு மிரவும் பயிலாத பூசை சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.
|
9
|
இராப்பக லற்ற இடத்தே யிருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகி இராப்பக லற்ற இறையடி யின்பத்(து) இராப்பகல் மாயை இரண்டடித் தேனே. 13,
|
10
|
Go to top |