பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம் சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
|
1
|
படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக் கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில் மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம் அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.
|
2
|
ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச் செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில் வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம் உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.
|
3
|
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப் புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம் பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.
|
4
|
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும் மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ் சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.
|
5
|
Go to top |
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக் கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல் வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந் தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.
|
6
|
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப் பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில் மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத் துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.
|
7
|
கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில் மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம் உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.
|
8
|
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும் எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும் எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.
|
9
|
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல் வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம் பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.
|
10
|
Go to top |
வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத் தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக் கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங் கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.
|
11
|