வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல லில்லையே.
|
1
|
ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம வான்மகள் பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியும் கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள் ஆலநீ ழற்கீ ழிருந்தறஞ் சொன்ன அழகனே.
|
2
|
இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை யோர்தொழ மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனும் குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ கனன்றே.
|
3
|
ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும் வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியும் தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.
|
4
|
வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனும் செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும் கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள் நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.
|
5
|
Go to top |
பந்தம ரும்விரன் மங்கைநல் லாளொரு பாகமா வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகும் கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
|
6
|
துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும் வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு பங்கனும் தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ கனன்றே.
|
7
|
இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங் கைக்கிறை கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன் குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள் அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள் செய்யுமே.
|
8
|
ஓங்கிய நாரண னான்முக னும்உண ராவகை நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்னிழற் கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள் ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம ரனன்றே.
|
9
|
கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர் தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள் கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள் இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.
|
10
|
Go to top |
கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள் அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக் கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்சொல் படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.
|
11
|