நிணம்படு சுடலையி னீறு பூசிநின் றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம் உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும் குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
|
1
|
ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான் சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள் மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
|
2
|
அத்தகு வானவர்க் காக மால்விடம் வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல் கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
|
3
|
பாவண மேவுசொன் மாலை யிற்பல நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர் ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும் கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
|
4
|
வாரணி வனமுலை மங்கை யாளொடும் சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர நாரணி சிலைதனால் நணுக லாரெயில் கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
|
5
|
Go to top |
பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
|
6
|
இறையுறு வரிவளை யிசைகள் பாடிட அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர் சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக் குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
|
7
|
எடுத்தனன் கயிலையை யியல்வ லியினால் அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப் படுத்தன ரென்றவன் பாடல் பாடலும் கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
|
8
|
தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி நாடினா ரவரென்று நணுக கிற்றிலர் பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே.
|
9
|
நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர் ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
|
10
|
Go to top |
நற்றவர் காழியுண் ஞானசம் பந்தன் குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச் சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக் கற்றவர் கழலடி காண வல்லரே.
|
11
|