வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட அண்ணலா ராயிழை யாளொடு மமர்விடம் விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர் திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
|
1
|
வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு பொறியுலா மரவசைத் தாடியோர் புண்ணியன் மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடம் செறியுளார் புறவணி திருமுது குன்றமே.
|
2
|
ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல் நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம் தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.
|
3
|
உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும் விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம் உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த் திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே.
|
4
|
கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர் இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம் செடியதார் புறவணி திருமுது குன்றமே.
|
5
|
Go to top |
கானமார் கரியினீ ருரிவையார் பெரியதோர் வானமார் மதியினோ டரவர்தா மருவிடம் ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடும் தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.
|
6
|
மஞ்சர்தா மலர்கொடு வானவர் வணங்கிட வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே அஞ்சொலா ளுமையொடும் மமர்விட மணிகலைச் செஞ்சொலார் பயிறருந் திருமுது குன்றமே.
|
7
|
காரினா ரமர்தருங் கயிலைநன் மலையினை ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம் சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
|
8
|
ஆடினார் கானகத் தருமறை யின்பொருள் பாடினார் பலபுகழ்ப் பரமனா ரிணையடி ஏடினார் மலர்மிசை யயனுமா லிருவரும் தேடினா ரறிவொணார் திருமுது குன்றமே.
|
9
|
மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர் பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின் வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத் தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.
|
10
|
Go to top |
திண்ணினார் புறவணி திருமுது குன்றரை நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல் எண்ணினா னீரைந்து மாலையு மியலுமாப் பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
|
11
|
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|