காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான் வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
|
1
|
மத்த யானையின் ஈருரி மூடிய அத்த னேயணி ஆலவா யாய்பணி பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண் சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.
|
2
|
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம் திண்ண கத்திரு வாலவா யாயருள் பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
|
3
|
ஓதி யோத்தறி யாவம ணாதரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே ஆதி யேதிரு வாலவா யண்ணலே நீதி யாக நினைந்தருள் செய்திடே.
|
4
|
வைய மார்புக ழாயடி யார்தொழும் செய்கை யார்திரு வாலவா யாய்செப்பாய் கையி லுண்டுழ லுமமண் கையரைப் பைய வாது செயத்திரு வுள்ளமே.
|
5
|
| Go to top |
நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய தேற லார்திரு வாலவா யாய்செப்பாய் வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச் சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.
|
6
|
பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும் தொண்ட ருக்கெளி யாய்திரு வாலவாய் அண்ட னேயமண் கையரை வாதினில் செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.
|
7
|
அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச் செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப் பரக்கு மாண்புடை யாயமண் பாவரைக் கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.
|
8
|
மாலும் நான்முக னும்மறி யாநெறி ஆல வாயுறை யும்மண்ண லேபணி மேலை வீடுண ராவெற்ற ரையரைச் சால வாதுசெ யத்திரு வுள்ளமே.
|
9
|
கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய் மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.
|
10
|
| Go to top |
செந்தெ னாமுர லுந்திரு வாலவாய் மைந்த னேயென்று வல்லம ணாசறச் சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம் பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.
|
11
|
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|