சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஓமாம்புலியூர் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=7Fgqyypgt5U   Add audio link Add Audio

பூங்கொடி மடவா ளுமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர் விருப்பொடு முறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

1

சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே. 

2

பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையா லாகுதி வேட்கும்
ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

3

புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவ னுறைவிடம் வினவில்
கற்றநால் வேத மங்கமோ ராறுங் கருத்தினா ரருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

4

நிலத்தவர் வான மாள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுர ராசற வாழி யளித்தவ னுறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

5
Go to top

மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற  மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

6

தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை யரக்கனொண் கயிலை
அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த வாதியா ருறைவிடம் வினவில்
மலையென வோங்கு மாளிகை நிலவு மாமதின் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

8

கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு முகந்தினி துறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

9

தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

10
Go to top

விளைதரு வயலுள் வெயில்செறி பவள மேதிகண் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுண் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்க ளமரலோ கத்திருப் பாரே. 

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஓமாம்புலியூர்
3.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்
Tune - புறநீர்மை   (திருஓமாம்புலியூர் )
6.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர் ஆரும் மூ இலை
Tune - திருத்தாண்டகம்   (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000