சூலப் படையானைச் சூழாக வீழருவிக் கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப் பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
|
1
|
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில் புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க் கொக்கிறகின் றூவல் கொடியெடுத்த கோவணத்தோ டக்கணிந்த வம்மானை நான்கண்ட தாரூரே.
|
2
|
சேய வுலகமுஞ் செல்சார்வு மானானை மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பானை வேயொத்த தோளியர்த மென்முலைமேற் றண்சாந்தின் ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.
|
3
|
ஏறேற்ற மாவேறி யெண்கணமும் பின்படர மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தில் நீறேற்ற மேனியனாய் நீள்சடைமே னீர்ததும்ப ஆறேற்ற வந்தணனை நான்கண்டதாரூரே.
|
4
|
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப் பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார் தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில் பூங்கோயி லுண்மகிழ்ந்து போகா திருந்தாரே.
|
5
|
Go to top |
எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின் நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை யந்திவாய்ச் செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.
|
6
|
போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு வேழத் துரிபோர்த்தான் வெள்வளையா டான்வெருவ ஊழித்தீ யன்னானை யோங்கொலிமாப் பூண்டதோர் ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.
|
7
|
வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத் துஞ்சிருளி லாட லுகந்தானைத் தன்றொண்டர் நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித் தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.
|
8
|
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன நீரமுது கோதையோ டாடிய நீண்மார்பன் பேரமுத முண்டார்க ளுய்யப் பெருங்கடனஞ் சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.
|
9
|
தாடழுவு கையன் றாமரைப்பூஞ் சேவடியன் கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான் ஆடரவக் கிண்கிணிக்கா லன்னானோர் சேடனை ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.
|
10
|
Go to top |
மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலால் துஞ்சாப்போர் வாளரக்கன் றோணெரியக் கண்குருதிச் செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பிற் பால்வெண்ணீற் றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.
|
11
|
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|