வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென் றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும் ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
1
|
நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ என்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
2
|
ஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம் பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க் கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும் அருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
3
|
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
4
|
வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும் உண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப் பண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார அண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
5
|
| Go to top |
எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும் வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற் கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
6
|
வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன் செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
7
|
நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம் மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும் அறிவனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
8
|
நலந்திகழ் வாயி னூலாற் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை யரச தாள வருளினா யென்று திண்ணம் கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக அலந்தன னால வாயில் அப்பனே யருள்செ யாயே.
|
9
|
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப் பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன் எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலு மிருபது தோள் அடர்த்தனே யால வாயி லப்பனே யருள்செ யாயே.
|
10
|
| Go to top |
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|