மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
1
|
திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற் சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம் அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும் அமரர்நம் பிகும ரன்முதல் தேவர் தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும் எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
2
|
வருந்தஅன் றும்மத யானை யுரித்த வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம் அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம் புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
3
|
ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரியநம் பிதெரி யம்மறை அங்கம் கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக் குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும் சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும் ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
4
|
குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக் குலைத்தநம் பிசிலை யாவரை கையில் பற்றுநம் பிபர மானந்த வெள்ளம் பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால் மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன் மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம் எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
5
|
Go to top |
அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய் ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள் தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம் தரித்தநம் பிசம யங்களின் நம்பி தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
6
|
பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணா உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே உலகுநம் பிஉரை செய்யும தல்லால் முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
7
|
சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார் அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
8
|
காண்டுநம் பிகழற் சேவடி என்றுங் கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத் தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
|
9
|
கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக் கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம் பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *
|
10
|
Go to top |