| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பந்தற்பொற் பாரப யோதர பந்தற்பொற் பாரப யோதர 1331 - பந்தப்பொற் பார (திருப்பூவணம்) Songs from this thalam திருப்பூவணம்
1331 திருப்பூவணம் திருப்புகழ் ( )
பந்தப்பொற் பார
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன ...... தனதானா
முந்தச்சிற் றாடைசெய் மேகலை
பண்புற்றுத் தாளொடு வீசிய ...... துகிலோடே
பண்டைச்சிற் சேறியில் வீதியில்
கண்டிச்சித் தாரொடு மேவிடு
பங்குக்கைக் காசுகொள் வேசையர் ...... பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி தோகையர்
கந்தக்கைத் தாமரை யாலடி
கும்பிட்டுப் பாடிசை வீணையர் ...... அநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய
சண்டிச்சிக் சீயென வாழ்துயர்
குன்றப்பொற் பாதக்ரு பாநிதி ...... அருள்வாயே
அந்தத்துக் காதியு மாகியு
மந்திக்குட் டானவ னானவ
னண்டத்தப் பாலுற மாமணி ...... ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் ...... விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய ...... பெருமாளே.
முந்தச்சிற் றாடைசெய் மேகலை
பண்புற்றுத் தாளொடு வீசிய ...... துகிலோடே
பண்டைச்சிற் சேறியில் வீதியில்
கண்டிச்சித் தாரொடு மேவிடு
பங்குக்கைக் காசுகொள் வேசையர் ...... பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி தோகையர்
கந்தக்கைத் தாமரை யாலடி
கும்பிட்டுப் பாடிசை வீணையர் ...... அநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய
சண்டிச்சிக் சீயென வாழ்துயர்
குன்றப்பொற் பாதக்ரு பாநிதி ...... அருள்வாயே
அந்தத்துக் காதியு மாகியு
மந்திக்குட் டானவ னானவ
னண்டத்தப் பாலுற மாமணி ...... ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் ...... விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய ...... பெருமாளே.
வேசியர்களின் அழகில் மயக்கமுற்று வாழ்நாளையெல்லாம் வீணே இழந்தேன். என்னைக் காத்து அருள வேண்டும் பெருமாளே! சமணர்களுடன் திருஞானசம்பந்தர் வாது செய்து அதில் வெற்றி பெற்றார். அதனால் சமணர்கள் ஒருகோடிப் பேர் தாங்கள் முன்னமே நியமித்துக் கொண்டபடி கழுவேறித் தங்களை மாய்த்துக் கொண்டனர். இதனை, அங்கத்தைப் பாவை செய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் கழுவர்படைவீடு என்று அழைக்கபட்டது. இப்பொழுது கழுகேர்கடை என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது. இவ்வூர் திருவிளையாடற் புராணத்திலும் திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திருப்பூவணத்தில் 10 நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6 ஆம் நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும் கருத்திற் கொள்ளவேண்டியதாய் உள்ளது.
Add (additional) Audio/Video Link
Similar songs: வேசியர்களின் அழகில் மயக்கமுற்று வாழ்நாளையெல்லாம் வீணே
இழந்தேன். என்னைக் காத்து அருள வேண்டும் பெருமாளே!
சமணர்களுடன் திருஞானசம்பந்தர் வாது செய்து அதில் வெற்றி பெற்றார்.
அதனால் சமணர்கள் ஒருகோடிப் பேர் தாங்கள் முன்னமே நியமித்துக்
கொண்டபடி கழுவேறித் தங்களை மாய்த்துக் கொண்டனர். இதனை,
"அங்கத்தைப் பாவை செய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி"
என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். இவ்வாறு சமணர்கள்
கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கபட்டது. இப்பொழுது
"கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் திருப்பூவணத்திற்கு
அருகே உள்ளது. இவ்வூர் திருவிளையாடற் புராணத்திலும் திருப்புகழிலும்
திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திருப்பூவணத்தில் 10 நாள் திருவிழாவில்
கழுவேறுதல் 6 ஆம் நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும்
கருத்திற் கொள்ளவேண்டியதாய் உள்ளது.
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன ...... தனதானா