This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய ...... குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட ...... விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென ...... முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு ...... முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை ...... முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
திருமொழி யுரைபெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய.....குளவோனே திறலுயர் மதுரையில் அமணரை உயிர்கழு தெறிபட மறுகிட.....விடுவோனே ஒருவு அரும் உனதருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறுமெனை.....யருள்வாயோ உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு.....மயில்வீரா கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென.....முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு.....முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை.....முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறை தமிழ் முதுகிரி வலம்வரு.....பெருமாளே.
வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக சிவபிரான் உன்னிடத்தில் வணங்க முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே, நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்களைப் போல துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ? உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாக திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே, கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின் கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே, கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே, கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே, நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே, இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s) திருமொழி யுரைபெற ... வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காகஅரன் உனதுழி பணிசெய ... சிவபிரான் உன்னிடத்தில் வணங்கமுனம் அருளிய குளவோனே ... முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே,திறலுயர் மதுரையில் அமணரை ... ஒளிமிக்க மதுரையில் சமணர்களின்உயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே ... உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே,ஒருவு அரும் உனதருள் ... நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில்பரிவிலர் அவர்களின்உறு ... அன்பில்லாதவர்களைப் போலபடர் உறுமெனை யருள்வாயோ ... துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ?உலகினில் அனைவர்கள் புகழ்வுற ... உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாகஅருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா ... திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே,கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் ... கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின்கணினெதிர் தருவென முனமானாய் ... கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே,கருமுகில் பொருநிற அரிதிரு மருமக ... கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே,கருணையில் மொழிதரு முதல்வோனே ... கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே,முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட ... நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறுமுரணுறு மசுரனை முனிவோனே ... மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே,முடிபவர் வடிவறு சுசிகர முறை ... இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடையதமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே. ... தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs: 240 - அரகர சிவன் அரி (திருத்தணிகை)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
751 - திருமொழி (விருத்தாசலம்)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
Songs from this thalam விருத்தாசலம்
750 - குடத் தாமரையாம்
751 - திருமொழி
752 - பசை அற்ற உடல்