| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
காமியத் தழுந்தி ...... யிளையாதே காமியத் தழுந்தி யிளையாதே 212 - காமியத் தழுந்தி (சுவாமிமலை) Songs from this thalam சுவாமிமலை
212 சுவாமிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 102 - வாரியார் # 205 )
காமியத் தழுந்தி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்தி லந்தம் அருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலிந்து போகாமல், யம தூதர்களின் கைகளிற் சிக்கி இறந்து போகாமல், ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு, யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய) அருள்வாயாக. வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே, சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே, பொன்மலையைப் போலச் சிறந்த மயிலில் ஏறும் வீரனே, திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: காமியத் தழுந்தி ... ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு
யிளையாதே ... மெலிந்து போகாமல்,
காலர்கைப் படிந்து ... யம தூதர்களின் கைகளிற் சிக்கி
மடியாதே ... இறந்து போகாமல்,
ஓமெழுத்தி லன்பு ... ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு
மிகவூறி ... மிகவும் ஏற்பட்டு,
ஓவியத்தி லந்தம் ... யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை
(அடைய)
அருள்வாயே ... அருள்வாயாக.
தூமமெய்க் கணிந்த ... வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள
சுகலீலா ... சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே,
சூரனைக் கடிந்த கதிர்வேலா ... சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே,
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா ... பொன்மலையைப் போலச் சிறந்த
மயிலில் ஏறும் வீரனே,
ஏரகத் தமர்ந்த பெருமாளே. ... திருவேரகம் என்ற சுவாமிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000