சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!வீடு பேறு தரும் திருப்புகழ்
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
13
திருப்பரங்குன்றம்
சந்ததம் பந்த
தந்தனந் தந்தத் ...... தனதான
தந்தனந் தந்தத் ...... தனதான
வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா
வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே. சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=EWPds8Y_L9I
168
பழநி
திமிர உததி
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ...... பெருமாளே. திமிர வுததி யனைய
நரகசெனன மதனில்
விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அ திக குலமும்
அறிவு நிறையும் வரவே
நின் அருள தருளி
எனையு மனதோடு
அடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெல் அசுரா தமது
தலைக ளுருள
மிகவேநீள் சலதி யலற
நெடிய பதலை தகர
அயிலை விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர
பழநி விரவு மமரர் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=saudio.html
205
சுவாமிமலை
இருவினை புனைந்து
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான ...... தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக ...... மலமூட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு ...... மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு ...... நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே. இருவினை புனைந்து
ஞான விழிமுனை திறந்து
நோயினிருவினை யிடைந்து போக
மலமூட விருளற விளங்கி
ஆறு முகமொடு கலந்து
இரண்டு பேரும் பேதமிலையென
அழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து
தேவர் பணிய விண் மடந்தை பாத மலர்தூவ
பரிவுகொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயிலுடன் குலாவி வரவேணும்
அரியய னறிந்திடாத அடியிணை
சிவந்த பாதம் அடியென
விளங்கி யாடு நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி
மகிழ் மரகதம்பெண் ஆகம் அயலணி
சிவன் புராரி யருள்சேயே
மருவலர்கள் திண்ப ணார முடியுடல் நடுங்க
ஆவி மறலியுண வென்ற வேலை யுடையோனே
வளைகுலம் அலங்கு காவிரியின்வட புறம்
சுவாமி மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே.
249
திருத்தணிகை
எனக்கென யாவும்
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே. எனக்கென யாவும் படைத்திட
நாளும் இளைப்பொடு
காலந் தனிலோயா
எடுத்திடு காயத் தனைக்கொடு
மாயும்
இலச்சை இலாதென் பவமாற
உனைப்பல நாளுந் திருப்புகழாலும் உரைத்திடுவார்
தங் குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரியாது
ஒண்பொலச் சரண் நானுந் தொழுவேனோ?
வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள் கொன்றவன்
நீயே விளப்பென மேலென்றிட
அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=.html#audio
308
ஆறு திருப்பதி
ஈனமிகுத்துள பிறவி
தானதனத் தனதனன ...... தனதான
தானதனத் தனதனன ...... தனதான
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
யானுமுனக் கடிமையென ...... வகையாக
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
நாணமகற் றியகருணை ...... புரிவாயே
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே. ஈனமிகுத்துள பிறவி யணுகாதே
யானுமுனக்கு அடிமையென வகையாக
ஞானஅருள் தனையருளி
வினைதீர
நாணம் அகற்றிய கருணை புரிவாயே
தானதவத்தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத்தமி துணைவ முருகோனே
401
திருவருணை
இருவினை அஞ்ச
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே. இருவினை யஞ்ச
மலவகை மங்க
இருள்பிணி மங்க
மயிலேறி
இனவருள் அன்பு மொழிய
க டம்புவின் அதகமும் கொடு
அளிபாட
கரிமுகன் எம்பி முருகனென
அண்டர் களிமலர் சிந்த
அடியேன்முன் கருணைபொழிந்து
முகமும் மலர்ந்து கடுகி
நடங்கொடு அருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட
விடையேறிச் சிவம்
வெளி யங்கண்அருள் குடிகொண்டு
திகழந டஞ்செய்து
எமையீண் அரசியிடங்கொள
மழுவுடை யெந்தை அமலன்
மகிழ்ந்த குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=qUvMB8c0AnI
402
திருவருணை
இருவினை ஊண்
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
தனதன தாந்த தந்த ...... தனதான
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே. இருவினை ஊண் பசும் பை
கரு விளை கூன் குடம்பை
இடர் அடை பாழ் பொதும்பு
அகித வாரி இடை திரி சோங்கு
கந்தம் மது அது தேங்கு கும்பம்
இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல்
பாண்டம்
அஞ்சும் மருவிய கூண்டு
நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை
அழியாது என்று
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து
உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ
அருணையில் ஓங்கு துங்க சிகரம்
கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்
அடியவர் பாங்க
பண்டு புகல் அகிலாண்டம் உண்ட
அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன்
உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த
வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச
நிசேந்த்ர கந்த
குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.
452
சிதம்பரம்
குகனே குருபரனே
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத் ...... தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே. குகனே குருபரனே என நெஞ்சில் புகழ
அருள் கொடு நாவினில் இன்ப குமுளி
சிவ அமுது ஊறுக உந்திப் பசி ஆறி
கொடிய இரு வினை மூலமும்
வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக் குலைய
நம சிவ ஓம் என கொஞ்சி களி கூர
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி
இணை இலி நாடக செம் பொன் பரம கதி
இதுவாம் என சிந்தித்து அழகாக
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார்
ம(ன்)ன
அம் பொன் தருண சரண் மயில் ஏறி
உன் அம் பொன் கழல் தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு இயல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி
தமருகம் வீணைகள் பொங்க
தடி அழனம் உக
மாருதம் சண்ட சமர் ஏறி
ககனம் மறை பட ஆடிய செம் புள்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச தொடும் வேலா
கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு
உருக மனம் முனம் நாடியே கொஞ்சி
கனக சபைதனில் மேவிய கந்தப் பெருமாளே.
493
சிதம்பரம்
எழுகடல் மணலை
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக ...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு ...... மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு ...... பெருமாளே. எழுகடல் மணலை
அளவிடி னதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலும்
இனியுடல் விடுக முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி
மறலி கமலனு மிகவும் அயர்வானார்
கடனுன தபயம்
அடிமையு னடிமை
கடுகியு னடிகள் தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளும்
முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் வருவோனே
எழுகடல் குமுற
அவுணர்க ளுயிரை யிரைகொளும்
அயிலை யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில்
நட மருவு பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=AmiWjIsCGKE
517
கயிலைமலை
திரு நிலம் மருவி
தனதன தனனத் தான தனதன தனனத் தான
தனதன தனனத் தான ...... தனதான
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
சிவவழி யுடனுற் றேக ...... பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
திரிபுர மெரியத் தீயி ...... னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல ...... மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
பரியினை மலர்விட் டாடி ...... அடியார்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக ...... ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
டடியவர் கயிலைக் கான ...... பெருமாளே. திரு நிலம் மருவிக் காலின் இரு வழி அடை பட்டு ஓ(ட்)டி
சிவ வழி உடன் உற்று ஏக பர(ம்) மீதே
சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி
கோல திரி புரம் எரியத் தீயில் நகை மேவி
இரு வினை பொரியக் கோல திருவருள் உருவத்து ஏகி
இருள் கதிர் இலி பொன் பூமி தவசு ஊடே
இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி
தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட
முத்தேவர் பழ மறை பணிய
சூலம் மழு மானும் பரிவோடு சுழல
சேடன் முடி நெறு நெறு என
கோவு பரியினை மலர் விட்டு ஆடி
அடியோர்கள் அரஹர உருகிச் சே செ என
திரு நடனக் கோலம் அருள் செ(ய்)யும் உமையின் பாகர்
அருள் பாலா
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப்
போரொடு
அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே.
561
திருசிராப்பள்ளி
வாசித்து
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன ...... தந்ததான
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே. வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது
நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது
விந்துநாத ஓசைக்குத் தூர மானது
மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது
கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறு
மெய்ஞ் ஞானத்தைப் போதி யாய்
இனி யூனத்தைப் போடி டாது
மயங்கலாமோ
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய்
வேடிச்சிக் காக மாமயலாகி
பொற் பாத மேபணி கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்
வய லூரத்தில்
காள மோடு அடர் ஆரத்தைப் பூண்
ம யூர துரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை
ரேசித்தெட் டாத யோகிகள்
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=ErAF8VNmF4A
567
இரத்னகிரி
பத்தியால் யானுனை
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே. பத்தியால் யானுனை
பலகாலும் பற்றியே
மாதிருப்புகழ் பாடி
முத்தனாம் ஆறெனை
பெருவாழ்வின் முத்தியே
சேர்வதற்கு அருள்வாயே
உத்தம அதான
சற் குணர்நேயா
ஒப்பிலா மா
மணிக்கிரிவாசா
வித்தகா
ஞானசத்தி நிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=QPxq2Jm5BAs
634
கழுகுமலை
கோங்க முகை
தாந்த தனன தனன தாந்த தனன தனன
தாந்த தனன தனனந் ...... தனதான
கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
மேந்து குவடு குழையும் ...... படிகாதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே. கோங்க முகையு(ம்) மெலிய வீங்கு புளக களபம் ஏந்து(ம்)
குவடு குழையும்படி காதல் கூர்ந்து
குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி
அமுது உண்டு
இயல் மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும்
வாய்ந்த துயிலை மிகவும் தணியாத வாஞ்சை உடைய
அடிமை
நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து
அடைவேனோ
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ(ம்) மகரம் ஓங்கு
உததியின் முழுகும் பொரு சூரும் ஓய்ந்து பிரமன் வெருவ
வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி
வேலா
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு
மருவும் குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும்
அளவில் உதவும் பெருமாளே.
726
சிறுவை
பிறவியான சடம்
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே. பிறவியான சடமிறங்கி
வழியிலாத துறைசெறிந்து
பிணிகளான துயருழன்று தடுமாறி
பெருகு தீய வினையி னொந்து
கதிகடோறும் அலைபொருந்தி
பிடிபடாத ஜனன நம்பி யழியாதே
நறைவிழாத மலர்முகந்த
அரிய மோன வழிதிறந்த
நளின பாத மெனது சிந்தை யகலாதே
நரர் சுராதிபரும்வணங்கும்
இனிய சேவை தனைவி ரும்பி
நலனதாக அடிய னென்று பெறுவேனோ
பொறிவழாத முநிவர்
தங்கள் நெறிவழாத பிலனு ழன்று
பொருநிசாசரனைநினைந்து வினைநாடி
பொருவிலாமல் அருள்புரிந்து
மயிலினேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே
சிறுவராகி யிருவர்
அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல்
சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி
செயமதான நகர் அமர்ந்த
அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி
வரமி குந்த பெருமாளே.
780
வைத்தீசுரன் கோயில்
எத்தனை கோடி
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான ...... தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி
எத்தனை கோடி போனது அளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி
இப்படி யாவ தேது
இனிமேல் யோசித்திடில்
சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்தினில் ஆடலோடு
முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள்
சித்தமெ வீடதாக
நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான
மூணு நெட்டிலை சூல பாணி
அருள்பாலா
பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது
பீறு பத்திர பாத
நீல மயில் வீரா
பச்சிள பூக பாளை
செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=KTErmmB3O7s
847
திருவீழிமிழலை
எருவாய் கருவாய்
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான
எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே. எருவாய் கருவாய்
தனிலே யுருவாய்
இதுவே பயிராய்
விளைவாகி
இவர்போ யவராய்
அவர்போ யிவராய்
இதுவே தொடர்பாய்
வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதாய்
உடனே அவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோத அருள்தாராய்
முருகா வென ஓர் தரம் ஓதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா அறியா தவர்
சீர்ச் சிறுவா திருமால் மருகோனே
செழுமா மதில்சேர்
அழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=vZYvU5SJ8x4
858
திருவிடைமருதூர்
அறுகுநுனி பனி
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா ...... தனதன தனதான
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம்
ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி
தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட
மொளு மொளு என உடல் வளர
ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி
ஆவியாய ஓர் தேவிமாருமாய் விழு சுவரை அரிவையர்கள் படு
குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய்
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை
ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில்
மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என
நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி
ஞாளி போல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள்
சுவறி இட மொழியும் ஒரு வீணியார் சொ(ல்)லே மேலது
ஆயிடா விதி தனை நினையாதே
மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின்
வருவார்கள் போகுவார் காணுமோ எனா
விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என
மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில்
வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில
வாதம் ஊது காமாலை சோகை நோய் பெரு வயிறு வயிறு
வலி படுவன் வர
இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா வழ வழ என
உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம்
நாடி பேதமாய்
மனையவள் மனம் வேறாய் மறுக மனை உறும் அவர்கள்
நணுகு நணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு காடு வா
எனா வீடு போ எனா வலது அழிய விரகு அழிய உரை குழறி
விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள்
பல பேச
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை
மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற
ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம
தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்
ஏசிடார்களோ பாச நாசனே
இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற ஏக
போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை
அருள்
இடை மருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர்
பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=.html#audio
925
கருவூர்
தசையாகிய
தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் ...... தனதான
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப் ...... பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத் ...... தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் ...... களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் ...... தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத் ...... தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் ...... திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் ...... துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் ...... பெருமாளே. தசையாகிய கற்றையினால் முடிய
தலைகால் அளவு ஒப்பனையாயே
தடுமாறுதல் சற்று ஒருநாள்
உலகில் தவிரா உடலத்தினை நாயேன்
பசுபாசமும் விட்டு
அறிவால் அறிய
படுபூ ரண நிட்களமான
பதிபாவனை உற்று
அநுபூ தியில் அப்படியே அடைவித்து அருள்வாயே
அசலேசுரர் புத்திரனே
குணதிக்கு அருணோதய
முத்தமிழோனே
அகில ஆகம வித்தகனே
துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா
கசிவார் இதயத்து அமிர்தே
மதுபக் கமலா லயன்மைத்துனவேளே
கருணாகர சற்குருவே
குடகிற் கருவூர் அழகப் பெருமாளே.
943
அவிநாசி
இறவாமற் பிறவாமல்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே. இறவாமற் பிறவாமல்
எனையாள்சற்குருவாகி
பிறவாகி
திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே
குகனேசொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனே
அவிநாசிப் பெருமாளே.
Audio/Video Link(s) https://www.youtube.com/watch?v=92N9-tlfaEg
949
பேரூர்
தீராப் பிணிதீர
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. தீராப் பிணிதீர
சீவ ஆத்தும ஞான
ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே
பாரோர்க் கிறைசேயே
பாலாக் கிரிராசே
பேராற் பெரியோனே
பேரூர்ப் பெருமாளே.
998
பொதுப்பாடல்கள்
நாலிரண்டிதழாலே
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள
ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரனு
நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
நூல றிந்தம ணீமா மாடமு
மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
சால மண்டப மீதே யேறிய
வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
மாரி பிங்கலை நானா தேசிய
மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பிகை ஞாதா வானவ
ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
சூலி மந்த்ரச பாஷா பாஷணி
காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூலாய் வாள்சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே
தான் இள ஞாயிறு என்று உறு கோலா காலனும்
அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்
யோக மந்திர மூலாதாரனு(ம்)
நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக
மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)
நூல் அறிந்த மணீ மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய்
ஆல கந்தரி மோடா மோடி
குமாரி பிங்கலை நானா தேசி
அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன
சம்ப்ரமி
மாதா மாதவி ஆதி அம்பிகை
ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே
தேவர்கள் பெருமாளே.
1168
பொதுப்பாடல்கள்
நிருதரார்க்கு ஒரு
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தனதான
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானுறு
சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
மருளி யாட்கொளு மாறே தானது
தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நாளே தானுறு
தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறு
மசுர பார்த்திப னோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரி யோடே தானையு
மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய
அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே. நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய
விறலான நெடிய வேற்படையானே ஜேஜெய
எனஇராப்பகல் தானே நான்மிக
நினது தாள் தொழு மாறே தான்
இனி யுடனேதான்
தரையின்ஆழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி
உன் அடியார்வாழ் சபையி னேற்றி
இன் ஞானா போதமும் அருளி
ஆட்கொளு மாறே தானது
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒருநாளே
தருவி னாட்டரசாள்வான்
வேணுவினுருவமாய்ப்பல நாளே
தானுறு தவசினால்
சிவன் நீபோய் வானவர் சிறைதீர
சகல லோக்கியமே தான் ஆளுறும்
அசுர பார்த்திபனோடே சேயவர் தமரை
வேற்கொடு நீறாயேபட விழ மோதென்று
அருள ஏற்று அமரோடே போய்
அவருறையு மாக்கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி
அமரில் வீட்டியும்
வானோர் தானுறு சிறையை மீட்டு
அரனார்பால் மேவிய அதி பராக்ரம வீரா
வானவர் பெருமாளே.
1250
பொதுப்பாடல்கள்
தீ ஊதை தாத்ரி
தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த ...... தனதான
தீயூதை தாத்ரி பானீய மேற்ற
வானீதி யாற்றி ...... கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க ...... அறியாதே
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்து ...... னடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க ...... வுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த ...... இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப ...... றியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டி
வானாடு காத்த ...... பெருமாளே. தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும்
ஆசைச் சேறு ஊறு தோல் பை
யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை
பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை
போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்
வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில்
ஏய்வாளை வேட்க உரு மாறி
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த
இளையோனே
மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய
மோதி
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி
வான் நாடு காத்த பெருமாளே.
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000