| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
எம்புருமானார் அருளிச்செய்தது
மூன்றாம் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்
பெரிய திருவந்தாதி
Songs from 2585.0 to 2589.0 ( காஞ்சிபுரம் )
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
[2585.0]
Back to Top
[2585.1]
Back to Top
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை
[2586.0]
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என்?
[2587.0]
என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று
எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று
[2588.0]
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ அம்மா காட்டும் நெறி?
[2589.0]
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000