![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
பட்டினத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது 11 -th Thirumurai 11.030 திருவொற்றியூர் ஒருபா ஒருபது பண் - (திருவொற்றியூர் ) |
| நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை மெய்வளி ஐயொடு பித்தொன் றாக ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத் திரையுடைத் தோலே செழுந்திரை யாகக் கூடிய குருதி நீரினுள் நிறைந்து மூடிய இருமல் ஓசையின் முழங்கிச் சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக் குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக் கால்கையின் நரம்பே கண்ட மாக மேதகு நிணமே மெய்ச்சா லாக முழக்குடைத் துளையே முகங்க ளாக வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள் துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங் காவா என்றுநின் அருளினைப் பெற்றவர் நாவா யாகிய நாதநின் பாதம் முந்திச் சென்று முறைமையின் வணங்கிச் சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப் பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத் துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக் காமப் பாரெனுங் கடுவெளி அற்றத் தூமச் சோதிச் சுடருற நிறுத்திச் சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும் ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே. | [ 8] |
| மேலே செல் |
|
3.057
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ பண் - பஞ்சமம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
4.045
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத பண் - திருநேரிசை:கொல்லி (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
4.046
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து பண் - திருநேரிசை (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
4.086
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற பண் - திருவிருத்தம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
5.024
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒற்றி ஊரும் ஒளி மதி, பண் - திருக்குறுந்தொகை (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
6.045
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் பண் - திருத்தாண்டகம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
7.054
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அழுக்கு மெய் கொடு உன் பண் - தக்கேசி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
7.091
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் பண் - குறிஞ்சி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
|
11.030
11 -th Thirumurai
பட்டினத்துப் பிள்ளையார்
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
திருவொற்றியூர் ஒருபா ஒருபது பண் - (திருவொற்றியூர் ) |