![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.106 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3 Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3 |
| பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ, வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே. | [ 36] |
|
மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்தி லுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப் பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ? | |
| மேலே செல் |
|
8.106
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) |