சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

மாணிக்க வாசகர்   
திருவாசகம்  

8 -th Thirumurai   8.106  
நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
பண் - அயிகிரி நந்தினி  (உத்தரகோசமங்கை )
Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3 Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3

Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3
Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3

உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்,
விழைதருவேனை விடுதி கண்டாய்? விடின், வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய் மதியன்
பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே.

[ 46]
மான்போன்ற பார்வையையுடைய பெண்டிரது, கொங்கையின்கண் பலாக்கனியில் மொய்க்கும் ஈயை ஒத்து விரும் புகின்ற என்னை விட்டுவிடுவாயோ? விட்டுவிடுவாயாயின், கடல் விடமுண்ட மேகம் போன்ற கருமையான கழுத்தை உடையவன்; குணம் இல்லாதவன்; மானிடன்; குறைந்த அறிவுடையவன்; பழைய பெரிய பரதேசி; என்று அடிக்கடி உன் இகழ்ச்சியை எடுத்துச் சொல்வேன்.

Thevaaram Link  - Shaivam Link
உத்தரகோசமங்கை Sthala Pathigam
8.106   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
பண் - அயிகிரி நந்தினி   (உத்தரகோசமங்கை )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group