![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.005
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய் அருகே புனல் பாய, பண் - நட்டபாடை (கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியச்சுந்தரர் அகிலாண்டநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=MFxa_rjB3t4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.005  
செய் அருகே புனல் பாய,
பண் - நட்டபாடை (திருத்தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆரணியச்சுந்தரர் திருவடிகள் போற்றி )
செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்- கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி, பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம் மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே. | [1] |
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி, கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி, உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில், அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே. | [2] |
தோல் உடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண் நீறு துதைந்து, இலங்கு நூல் உடையான்; இமையோர் பெருமான்; நுண் அறிவால் வழிபாடு செய்யும் கால் உடையான்; கரிது ஆய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி மேல் உடையான்; இமையாத முக்கண்; மின் இடையாளொடும் வேண்டினானே. | [3] |
சலசல சந்து அகிலோடும் உந்தி, சந்தனமே கரை சார்த்தி, எங்கும் பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி, பாய்ந்து இழி காவிரிப் பாங்கரின்வாய், கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே! | [4] |
தளை அவிழ் தண் நிற நீலம், நெய்தல், தாமரை, செங்கழு நீரும், எல்லாம் களை அவிழும் குழலார் கடிய, காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி, துளை பயிலும் குழல், யாழ், முரல, துன்னிய இன் இசையால் துதைந்த அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே. | [5] |
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக் கரும்பு இன் கட்டிக் கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன், பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி, முன் நின்று, அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே. | [6] |
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக் குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே! | [7] |
செற்றவர் தம் அரணம்(ம்) அவற்றைச் செவ் அழல் வாய் எரியூட்டி, நன்றும் கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி உற்றவர்தாம் உணர்வு எய்தி, நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற பெற்றமரும் பெருமானை அல்லால், பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே! | [8] |
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே, உரைக்கும் குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம் அல்லகண்டீர்; அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை காட்டுப்பள்ளி வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே! | [9] |
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை, கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்- துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே. | [10] |