எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா, வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே? சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன், பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!
பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே? இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல் வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!
தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன், பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே? அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க, துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே, நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே? தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய், சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே? நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)