பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
|
1
|
இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும் அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.
|
2
|
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரிய சிறப்பில்லி எம்மிறை ஓடும் உலகுயி ராகிநின் றானே.
|
3
|
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் மடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.
|
4
|
முகம்பீட மாம்மட முன்னிய தேகம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.
|
5
|
| Go to top |
அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும் சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும் செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 2,
|
6
|