உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே.
|
1
|
சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குற் பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க் கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும் அரும்பொறை யாகுமென் னாவியுந் தேய்வுற் றழிகின்றதே.
|
2
|
அப்புற்ற சென்னியன் தில்லை யுறாரி னவர்உறுநோய் ஒப்புற் றெழில்நல மூரன் கவரஉள் ளும்புறம்பும் வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம் மெல்லணை யேதுணையாச் செப்புற்ற கொங்கையர் யாவர்கொ லாருயிர் தேய்பவரே.
|
3
|
தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல் ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேற் பூவார் அகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய் பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேனரும் பாவியனே.
|
4
|
செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக் கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப் பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றிலையே நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே.
|
5
|
Go to top |
பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும் ஆங்கு வளைத்துவைத் தாரேனுங் கொள்கநள் ளார்அரணந் தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய் ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோமன் உறாவரையே.
|
6
|
தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன் சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார் நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே.
|
7
|
தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல் பிணியுறப் பேதைசென் றின்றெய்து மால்அர வும்பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே.
|
8
|
இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து குரவணை யுங்குழல் இங்கிவ ளால்இக் குறியறிவித் தரவணை யுஞ்சடை யோன்தில்லை யூரனை யாங்கொருத்தி தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே.
|
9
|
சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான் சிவந்தஅம் தாளணி யூரற் குலகிய லாறுரைப்பான் சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற் சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே.
|
10
|
Go to top |
குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத் தான்குழையாம் அராப்பயில் நுண்ணிடை யாரடங் காரெவ ரேயினிப்பண் டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று கராப்பயில் பூம்புன லூரன் புகுமிக் கடிமனைக்கே.
|
11
|
வந்தான் வயலணி யூர னெனச்சின வாள்மலர்க்கண் செந்தா மரைச்செல்வி சென்றசிற் றம்பல வன்னருளான் முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற் பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே.
|
12
|
வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற் செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலஞ்சூழ் மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண் டூதவிண் தோய்பிறையோ டெல்லிகைப் போதியல் வேல்வய லூரற் கெதிர்கொண்டதே.
|
13
|
புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக் கலவிக் கடலுட் கலிங்கஞ்சென் றெய்திக் கதிர்கொண்முத்தம் நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்துநின் றோனருள்போன் றுலவிய லாத்தனஞ் சென்றெய்த லாயின வூரனுக்கே.
|
14
|
செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம் மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள் இவ்வா றருள்பிறர்க் காகு மெனநினைந் தின்னகையே.
|
15
|
Go to top |
மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்ஒருவன் பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த அலரைப் பொறாதன் றழல்விழித் தோனம் பலம்வணங்காக் கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே.
|
16
|
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்துந் தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின் மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே.
|
17
|
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல்செய்வான் தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர்செம்ம லூரன்திண்டோள் மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத் தில்லை யானருளே போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே.
|
18
|
சேயே யெனமன்னு தீம்புன லூரன்திண் டோளிணைகள் தோயீர் புணர்தவந் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகொலந் தீயே யெனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய் வீயே யெனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே.
|
19
|
அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான் அரமங் கையரென வந்தணு கும்மவ ளன்றுகிராற் சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப் புரமங் கையரின்நை யாதைய காத்துநம் பொற்பரையே.
|
20
|
Go to top |
கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம் அனலூர் சடையோ னருள்பெற் றவரின் அமரப்புல்லும் மினலூர் நகையவர் தம்பா லருள்விலக் காவிடின்யான் புனலூ ரனைப்பிரி யும்புன லூர்கணப் பூங்கொடியே.
|
21
|
இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச் சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள் பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியினோ டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே.
|
22
|
வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன தீயாடி சிற்றம்பலமனை யாள்தில்லை யூரனுக்கின் றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள் யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே.
|
23
|
விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே.
|
24
|
திக்கின் இலங்குதிண் டோளிறை தில்லைச்சிற் றம்பலத்துக் கொக்கின் இறக தணிந்துநின் றாடிதென் கூடலன்ன அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால் தக்கின் றிருந்திலன் நின்றசெவ் வேலெந் தனிவள்ளலே.
|
25
|
Go to top |
அன்புடை நெஞ்சத் திவள்பே துறஅம் பலத்தடியார் என்பிடை வந்தமிழ் தூறநின் றாடி யிருஞ்சுழியல் தன்பெடை நையத் தகவழிந் தன்னஞ் சலஞ்சலத்தின் வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே.
|
26
|
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தாரவரென் நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவுமுண்டேற் பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே.
|
27
|
தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான் கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள் உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும் பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே.
|
28
|
தேன்வண் டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும் வான்வண் டுறைதரு வாய்மையன் மன்னு குதலையின்வா யான்வண் டுறைதரு மாலமு தன்னவன் வந்தணையான் நான்வண் டுறைதரு கொங்கையெவ் வாறுகொ னண்ணுவதே.
|
29
|
கயல்வந்த கண்ணியர் கண்ணினை யால்மிகு காதரத்தால் மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாமதியின் அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலம்நிலவு புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே.
|
30
|
Go to top |
கூற்றாயினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தாற் போற்றான் செறியிருட் பொக்கமெண் ணீர்கன் றகன்றபுனிற் றீற்றா வெனநீர் வருவது பண்டின்றெம் மீசர்தில்லைத் தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிர்அத் தேர்மிசையே.
|
31
|
வியந்தலை நீர்வையம் மெய்யே யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ் வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன் புயந்தலை தீரப் புலியூர் அரனிருக் கும்பொருப்பிற் கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே.
|
32
|
தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும் ஓவியங் கண்டன்ன வொண்ணு தலாள் தனக் கோகையுய்ப்பான் மேவியங் கண்டனை யோவந் தனனென வெய்துயிர்த்துக் காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வௌவுதல் கற்றனவே.
|
33
|
உடைமணிகட்டிச் சிறுதே ருருட்டி யுலாத்தருமிந் நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்னங் கடைமணி வாள்நகை யாயின்று கண்டனர் காதலரே.
|
34
|
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய் மெய்கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள்பெரியர் வைகொண்ட வூசிகொல் சேரியின் விற்றெம்இல் வண்ணவண்ணப் பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே.
|
35
|
Go to top |
கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய் வில்லாண் டிலங்கு புருவம் நெரியச் செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே.
|
36
|
மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலுந் தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னங் கித்தக் கருங்குவ ளைச்செவ்வி யோடிக் கெழுமினவே.
|
37
|
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த தவலங் கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச் சுவலங் கிருந்தநந் தோன்றல் துணையெனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணிசெயற் பாலை யரசனுக்கே.
|
38
|
சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய் வேறான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த பாறான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேங் காறான் தொடல்தொட ரேல்விடு தீண்டலெங் கைத்தலமே.
|
39
|
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர் பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு வந்தார் பரிசுமன் றாய்நிற்கு மாறென் வளமனையிற் கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே.
|
40
|
Go to top |
மின்றுன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர் சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில் நன்றுஞ் சிறியவ ரில்லெம தில்லம்நல் லூரமன்னோ இன்றுன் திருவரு ளித்துணை சாலுமன் னெங்களுக்கே.
|
41
|
செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக் கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் விழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே.
|
42
|
திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில் இருந்தேன் உயவந் திணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப் பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித் தாண்டநம் பெண்ணமிழ்தம் வருந்தே லதுவன் றிதுவோ வருவதொர் வஞ்சனையே.
|
43
|
இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் நிலையிமை யோரிறைஞ்சுஞ் செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியிற் புயன்மன்னு குன்றிற் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய் அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே.
|
44
|
கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித் தானிமை யோரிறைஞ்சும் மதுத்தங் கியகொன்றை வார்சடை யீசர்வண் தில்லைநல்லார் பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா எம்மைப் பூசிப்பதே.
|
45
|
Go to top |
சிலைமலி வாணுத லெங்கைய தாக மெனச்செழும்பூண் மலைமலி மார்பி னுதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை உலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே.
|
46
|
ஆறூர் சடைமுடி அம்பலத் தண்டரண் டம்பெறினும் மாறூர் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு நீறூர் கொடுநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச் சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற் சிறிதுயிலே.
|
47
|
ஐயுற வாய்நம் அகன்கடைக் கண்டுவண் டேருருட்டும் மையுறு வாட்கண் மழவைத் தழுவமற் றுன்மகனே மெய்யுற வாம்இதுன் னில்லே வருகெனவெள்கிச்சென்றாள் கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே.
|
48
|
காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே.
|
49
|
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|