வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல் தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கால்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே.
|
1
|
புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும் அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவிற் கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரந் தீர்த்தருளுந் தயல்வளர் மேனிய னம்பலத் தான்வரைத் தண்புனத்தே.
|
2
|
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச் சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார் வினைவளம் நீறெழ நீறணி யம்பல வன்றன்வெற்பிற் புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே.
|
3
|
நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன் முத்தஞ்சிந்திப் பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய் வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங் குரல்வே யளிமுரல் கொங்கர் தடமலர் கொண்டுவந்தே.
|
4
|
படமா சுணப்பள்ளி யிக்குவ டாக்கியப் பங்கயக்கண் நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே இடமா விருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே.
|
5
|
Go to top |
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோனரு ளென்னமுன்னி முத்தீன் குவளைமென் காந்தளின் 9; மூடித்தன் ஏரளப்பாள் ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப் பித்தீர் பணைமுலை காளென்னுக் கின்னும் பெருக்கின்றதே.
|
6
|
அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண் களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல் தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே.
|
7
|
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளுங் கள்ளகத்த கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக் கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே.
|
8
|
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில் எழுந்தார் மதிக்கம லம்மெழில் தந்தென இப்பிறப்பில் அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலமனையாய் செழுந்தா தவிழ்பொழி லாயத்துச் சேர்க திருத்தகவே.
|
9
|
பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற் கேய்வனவே.
|
10
|
Go to top |
அறுகால் நிறைமல ரைம்பால் நிறையணிந் தேன் அணியார் துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயமெல் லப்புகுக சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின் உறுகால் பிறர்க்கரி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே.
|
11
|
தழங்கு மருவியெஞ் சீறூர் பெரும இதுமதுவுங் கிழங்கு மருந்தி இருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர் முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக முத்தன்முத்தி வழங்கும் பிரானெரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே.
|
12
|
தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும் வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே.
|
13
|
மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லையிம் மாதர்க்கென்னப் பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக் கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக் கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே.
|
14
|
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச் சேய்தந்த வானக மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில் தாய்தந்தை கானவ ரேனலெங் காவலித் தாழ்வரையே.
|
15
|
Go to top |
மன்னுந் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென் றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடு திரும்பரெலாம் பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான் பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே.
|
16
|
பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகந் தனித்துண் டவன்தொழுந் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற் றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக் கென்றஞ்சு மெம்மனையே.
|
17
|
ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப் போய்விளை யாடலென் றாளன்னை அம்பலத் தான்புரத்தில் தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே.
|
18
|
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர் கற்று மறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண் டெற்றுந் திரையின் னமிர்தை யினித்தம ரிற்செறிப்பார் மற்றுஞ் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே.
|
19
|
வழியும் அதுவன்னை யென்னின் மகிழும்வந் தெந்தையும்நின் மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன் னேவய மம்பலத்துக் குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக் கெழியும்ம வேபணைத் தோள்பல வென்னோ கிளக்கின்றதே.
|
20
|
Go to top |
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர் உடையார் கடவி வருவது போலு முருவினதே.
|
21
|
உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த நெருப்பனை யம்பலத் தாதியை யும்பர்சென் றேத்திநிற்குந் திருப்பனை யூரனை யாளைப்பொன் னாளைப் புனைதல்செப்பிப் பொருப்பனை முன்னின்றென் னோவினை யேன்யான் புகல்வதுவே.
|
22
|
மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப் போதிடங் கொண்டபொன் வேங்கை தினைப்புனங் கொய்கவென்று தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே.
|
23
|
வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன் கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன் தடிவார் தினையெமர் காவேம் பெருமஇத் தண்புனமே.
|
24
|
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத் திருந்தம் பலத்துநின்று புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில் தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே.
|
25
|
Go to top |
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.
|
26
|
வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ் செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே.
|
27
|
பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப் புகலெமக்காம் விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு மேல்வரு மூரெரித்த நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக் கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புனமே.
|
28
|
பரிவுசெய் தாண்டம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அருவிசெய் தாழ்புனத் தைவனங் கொய்யவு மிவ்வனத்தே பிரிவுசெய் தாலரி தேகொள்க பேயொடு மென்னும்பெற்றி இருவிசெய் தாளி னிருந்தின்று காட்டு மிளங்கிளியே.
|
29
|
கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே மணியார் பொழில்காண் மறத்திர்கண் டீர்மன்னு மம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள் அயில்வே லொருவர்வந்தால் துணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே.
|
30
|
Go to top |
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூ ரரன்பொருப்பே இதுவெனி லென்னின் றிருக்கின்ற வாறெம் மிரும்பொழிலே எதுநுமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புனமே.
|
31
|
ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின் தேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை வானுந்து மாமதி வேண்டி அழுமழப் போலுமன்னோ நானுந் தளர்ந்தனன் நீயுந் தளர்ந்தனை நன்னெஞ்சமே.
|
32
|
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|