![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன் தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம் உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில் ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும் வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
Easy version Classic version
+ Show Meaning https://sivaya.org/audio/1.010 unnamulai.mp3 https://www.youtube.com/watch?v=JseyYCTqhG0 Add audio link
1.010
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவண்ணாமலை - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
1
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
2
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
3
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
4
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
5
Go to top
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.
6
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
7
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
8
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.
9
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.
10
Go to top
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவண்ணாமலை
1.010
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
Tune - திருநேரிசை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
8.107
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune - புறநீர்மை
(திருவண்ணாமலை )
8.108
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருவண்ணாமலை )
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000