![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
முந்தி நின்ற வினைக ளவைபோகச் மூவ ராய முதல்வர் முறையாலே பங்க யங்கண் மலரும் பழனத்துச் கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் பவள வண்ணப் பரிசார் திருமேனி தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் மலைய தனா ருடைய மதின்மூன்றும் நாட வல்ல மலரான் மாலுமாய்த் குண்டு முற்றிக் கூறை யின்றியே மாட மல்கு மதில்சூழ் காழிமன்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=wmv7e7-9cxY Add audio link
1.027
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருப்புன்கூர் - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு சொக்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகநாதர் திருவடிகள் போற்றி
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா வடிக ளவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
1
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னு மடிக ளவர்போலும்
ஏவி னல்லா ரெயின்மூன் றெரித்தாரே.
2
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையும் மிறையாரே.
3
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையி னல்ல பெருமா னவர்போலும்
விரையி னல்ல மலர்ச்சே வடியாரே.
4
திகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னு மடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.
5
Go to top
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற வடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.
6
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற வடிக ளவர்போலும்
கூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே.
7
சிலைய தனா லெரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல வரக்கன் றருக்கினை
மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே.
8
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
ஆட வல்ல வடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே.
9
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.
10
Go to top
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்புன்கூர்
1.027
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்தி நின்ற வினைகள் அவை
Tune - தக்கராகம்
(திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
7.055
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
Tune - தக்கேசி
(திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000