வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம் தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
|
1
|
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.
|
2
|
செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும் இவ்வா றறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.
|
3
|
மாறி வரும்இரு பால்மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம் தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
|
4
|
உதித்து வலத்திடம் போகின்ற போது அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும் உதித்தது வேமிக ஓடிடு மாகில் உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.
|
5
|
| Go to top |
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.
17, |
6
|