கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே. |
1
|
நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றி னேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல் ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே. |
2
|
விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவு மாறுவல் லார்பழிபற் றறுப்பாரே. |
3
|
அம்பி னேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம் பனேநட னேந லந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பி னேர்ந்தறி யார்தடுமாற் றவல்வினையே. |
4
|
பழைய தம்மடி யார்து திசெயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை விழாவொலி செய்யுங்கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த வாடிய
அழக னென்றெழுவார் அணியாவர் வானவர்க்கே. |
5
|
| Go to top |
பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி யின்மொழியால் தொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேம ணிமிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே. |
6
|
கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே. |
7
|
வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே. |
8
|
கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் றேடவானையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாது நீயும்வி யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள்
எருதுகந் தவனே யிரங்காயுன தின்னருளே. |
9
|
உடையி லாதுழல் கின்ற குண்டரும் ஊண ருந்தவத் தாய சாக்கியர்
கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே. |
10
|
| Go to top |
கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன்றி லாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க் கெளிதாகும் வானகமே. |
11
|