![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப் அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில் குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப் கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர் நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள் கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப போதின்மே லயன்றிருமால் போற்றியும்மைக் காணாது பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன் கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=TrwOWvAU8jY https://www.youtube.com/watch?v=TrwOWvAU8jY Add audio link
2.057
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநல்லூர் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
1
கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
2
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
3
மானமரு மென்விழியாள் பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
4
அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
5
Go to top
வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே.
6
மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
7
மாதமரு மென்மொழியாண் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
8
நாதனே யிவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதரா ளவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.
9
றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
10
Go to top
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநல்லூர்
1.086
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொட்டும் பறை சீரால் குழும,
Tune - குறிஞ்சி
(திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
2.057
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமரும் திருமேனி உடையீர்!
Tune - காந்தாரம்
(திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
3.083
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு இரிய விண்ட மலர்
Tune - சாதாரி
(திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
4.097
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டுமின், இல் பலி! என்று
Tune - திருவிருத்தம்
(திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)
6.014
திருநாவுக்கரசர்
தேவாரம்
நினைந்து உருகும் அடியாரை நைய
Tune - திருத்தாண்டகம்
(திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000