உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர் திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.
|
1
|
சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில் உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால் வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.
|
2
|
ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும் மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் பையர வல்குலாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.
|
3
|
விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப் புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும் சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
|
4
|
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான் அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.
|
5
|
| Go to top |
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
|
6
|
விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம் தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச் சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
|
7
|
திரிதரு புரம்எரி செய்த சேவகன் வரியர வொடுமதி சடையில் வைத்தவன் அரியொடு பிரமன தாற்ற லால் உருத் தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே.
|
9
|
சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.
|
10
|
| Go to top |
கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய சேடன செழுமதில் திருவிற் கோலத்தை நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.
|
11
|