![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும் கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும் காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும் பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலும் வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலும் தாளுடைச் செங் கமலத் தடங்கொள்சே வடியர் போலும் கூடினா ருமை தனோடே குறிப்புடை வேடங் கொண்டு வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும் மத்தனாய் மலையெ டுத்த வரக்கனைக் கரத்தோ டொல்க
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=TwKXKMpMV4I Add audio link
4.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவாலங்காடு (பழையனூர்) - திருநேரிசை அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே.
1
வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற்ப ழனை மல்கிய வள்ளல் போலும்
அந்தமி லடிகள் போலு மாலங்காட் டடிக ளாரே.
2
எண்ணிலார் புரங்கண் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய
அண்ணலா ரெம்மை யாளு மாலங்காட் டடிக ளாரே.
3
தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலு மாலங்காட் டடிக ளாரே.
4
கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை யறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி யம்பொடுங் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.
5
Go to top
காட்டினின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலுங்
பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினா ரரவந் தன்னை யாலங்காட் டடிக ளாரே.
6
நாளுடைக் காலன் வீழ வுதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலு மாலங்காட் டடிக ளாரே.
7
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே.
8
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை யுகப்பர் போலும்
பெற்றமே யுகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்
அற்றங்க ளறிவர் போலு மாலங்காட் டடிக ளாரே.
9
ஒத்தினார் திருவி ரலா லூன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வா ராலங்காட் டடிக ளாரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவாலங்காடு (பழையனூர்)
1.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
Tune - தக்கராகம்
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
4.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ள நீர்ச் சடையர் போலும்;
Tune - திருநேரிசை
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
6.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
Tune - திருத்தாண்டகம்
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
7.052
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முத்தா! முத்தி தர வல்ல
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
11.002
காரைக்கால் அம்மையார்
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
Tune -
(திருவாலங்காடு (பழையனூர்) )
This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000