தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே. |
1
|
பின்னிலேன் முன்னிலே னான் பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலே னாயி னேனா னிளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா வெறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே
நின்னலாற் களைக ணாரே நீறுசே ரகலத் தானே. |
2
|
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே. |
3
|
உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே. |
4
|
வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் ணிருந்த சூழல் வான்றவிழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனே னென்செய் கேனே. |
5
|
| Go to top |
உள்குவா ருள்ளத் தானை யுணர்வெனும் பெருமை யானை
உள்கினே னானுங் காண்பா னுருகினே னூறி யூறி
எள்கினே னெந்தை பெம்மா னிருதலை மின்னு கின்ற
கொள்ளிமே லெறும்பெ னுள்ள மெங்ஙனங் கூடு மாறே. |
6
|
மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ. |
7
|
அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே. |
8
|
வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்
னுள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கிநக்கு
வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே. |
9
|
பெருவிர லிறைதா னூன்றப் பிறையெயி றிலங்க வங்காந்
தருவரை யனைய தோளா னரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரு மொருவ னாய வுருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்கநான் றிரியு மாறே. |
10
|
| Go to top |