பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க் கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
|
1
|
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம் உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க் கில்லையே நுகர்போகம் யானேல் வானோர் உம்பருமா யூழியுமா யுலகே ழாகி ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர் தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன் தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.
|
2
|
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப் பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம் சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த் தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர் நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.
|
3
|
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ வையகமே போதாதே யானேல் வானோர் பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப் புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத் தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.
|
4
|
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள் ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம் உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன் வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல் மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள் அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும் ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.
|
5
|
| Go to top |
பொங்குமத மானமே ஆர்வச் செற்றக் குரோதமே யுலோபமே பொறையே நீங்கள் உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம் உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல் அங்கமலத் தயனொடுமா லாகி மற்று மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச் செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச் செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே.
|
6
|
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக் குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள் குறிநின்ற தமையாதே யானேல் வானோர் அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர் உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.
|
7
|
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க் கில்லையே நுகர்போகம் யானேல் வானோர் கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில் பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற் பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே.
|
8
|
மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி நாள்வாயு நும்முடைய மம்ம ராணை நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர் நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர் ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.
|
9
|
சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித் துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச் செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல் செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந் தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத் திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
|
10
|
| Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|