சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

6.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -அரியானை, அந்தணர் தம் சிந்தை  (கோயில் (சிதம்பரம்))  
6.002 திருநாவுக்கரசர் - தேவாரம் -மங்குல் மதி தவழும் மாட  (கோயில் (சிதம்பரம்))  
6.003 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,  (திருவதிகை வீரட்டானம்)  
6.004 திருநாவுக்கரசர் - தேவாரம் -சந்திரனை மா கங்கைத் திரையால்  (திருவதிகை வீரட்டானம்)  
6.005 திருநாவுக்கரசர் - தேவாரம் -எல்லாம் சிவன் என்ன நின்றாய்,  (திருவதிகை வீரட்டானம்)  
6.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)  (திருவதிகை வீரட்டானம்)  
6.007 திருநாவுக்கரசர் - தேவாரம் -செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,  (திருவதிகை வீரட்டானம்)  
6.008 திருநாவுக்கரசர் - தேவாரம் -விற்று ஊண் ஒன்று இல்லாத  (திருக்காளத்தி)  
6.009 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணங்கள் தாம் பாடி, வந்து  (திருவாமாத்தூர்)  
6.010 திருநாவுக்கரசர் - தேவாரம் -நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்  பூண்டார்;நூல்  (திருப்பந்தணைநல்லூர்)  
6.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,  (திருப்புன்கூரும் திருநீடூரும்)  
6.012 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்  (திருக்கழிப்பாலை)  
6.013 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி மாட நீள் தெருவு  (திருப்புறம்பயம்)  
6.014 திருநாவுக்கரசர் - தேவாரம் -நினைந்து உருகும் அடியாரை நைய  (திருநல்லூர்)  
6.015 திருநாவுக்கரசர் - தேவாரம் -குருகு ஆம்; வயிரம் ஆம்;  (திருக்கருகாவூர்)  
6.016 திருநாவுக்கரசர் - தேவாரம் -சூலப்படை உடையார் தாமே போலும்;  (திருவிடைமருதூர்)  
6.017 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்  (திருவிடைமருதூர்)  
6.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -வடி ஏறு திரிசூலம் தோன்றும்  (திருப்பூவணம்)  
6.019 திருநாவுக்கரசர் - தேவாரம் -முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;  (திருஆலவாய் (மதுரை))  
6.020 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)  (திருநள்ளாறு)  
6.021 திருநாவுக்கரசர் - தேவாரம் -முடித் தாமரை அணிந்த மூர்த்தி  (திருஆக்கூர்)  
6.022 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
6.023 திருநாவுக்கரசர் - தேவாரம் -தூண்டு சுடர் அனைய சோதி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
6.024 திருநாவுக்கரசர் - தேவாரம் -கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;  (திருவாரூர்)  
6.025 திருநாவுக்கரசர் - தேவாரம் -உயிரா வணம் இருந்து, உற்று  (திருவாரூர்)  
6.026 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாதித் தன் திரு உருவில்  (திருவாரூர்)  
6.027 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற    (திருவாரூர்)  
6.028 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;  (திருவாரூர்)  
6.029 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,  (திருவாரூர்)  
6.030 திருநாவுக்கரசர் - தேவாரம் -எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;  (திருவாரூர்)  
6.031 திருநாவுக்கரசர் - தேவாரம் -இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,  (திருவாரூர்)  
6.032 திருநாவுக்கரசர் - தேவாரம் -கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!  (திருவாரூர்)  
6.033 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் கை மதகரி உரிவைப்  (திருவாரூர்)  
6.034 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவனாய் உலகு ஏத்த நின்ற  (திருவாரூர்)  
6.035 திருநாவுக்கரசர் - தேவாரம் -தூண்டு சுடர் மேனித் தூநீறு  (திருவெண்காடு)  
6.036 திருநாவுக்கரசர் - தேவாரம் -அலை ஆர் கடல் நஞ்சம்  (திருப்பழனம்)  
6.037 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்  (திருவையாறு)  
6.038 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓசை ஒலி எலாம் ஆனாய்,  (திருவையாறு)  
6.039 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு ஏறு திருமேனி உடையான்  (திருமழபாடி)  
6.040 திருநாவுக்கரசர் - தேவாரம் -அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு  (திருமழபாடி)  
6.041 திருநாவுக்கரசர் - தேவாரம் -வகை எலாம் உடையாயும் நீயே  (திருநெய்த்தானம்)  
6.042 திருநாவுக்கரசர் - தேவாரம் -மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று  (திருநெய்த்தானம்)  
6.043 திருநாவுக்கரசர் - தேவாரம் -நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;  (திருப்பூந்துருத்தி)  
6.044 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்  (திருச்சோற்றுத்துறை)  
6.045 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்  (திருவொற்றியூர்)  
6.046 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,  (திருவாவடுதுறை)  
6.047 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவே, என் செல்வமே, தேனே,  (திருவாவடுதுறை)  
6.048 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்  (திருவலிவலம்)  
6.049 திருநாவுக்கரசர் - தேவாரம் -சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;  (திருகோகர்ணம் (கோகர்ணா))  
6.050 திருநாவுக்கரசர் - தேவாரம் -போர் ஆனை ஈர் உரிவைப்  (திருவீழிமிழலை)  
6.051 திருநாவுக்கரசர் - தேவாரம் -கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;  (திருவீழிமிழலை)  
6.052 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண் அவன் காண்; கண்  (திருவீழிமிழலை)  
6.053 திருநாவுக்கரசர் - தேவாரம் -மான் ஏறு கரம் உடைய  (திருவீழிமிழலை)  
6.054 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
6.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -வே(ற்)ற்று ஆகி விண் ஆகி  (திருக்கயிலாயம்)  
6.056 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொறை உடைய பூமி, நீர்,  (திருக்கயிலாயம்)  
6.057 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாட்டு ஆன நல்ல தொடையாய்,  (திருக்கயிலாயம்)  
6.058 திருநாவுக்கரசர் - தேவாரம் -மண் அளந்த மணி வண்ணர்  (திருவலம்புரம்)  
6.059 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்  (திருவெண்ணியூர்)  
6.060 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))  
6.061 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாதினை ஓர் கூறு உகந்தாய்!  (திருக்கன்றாப்பூர்)  
6.062 திருநாவுக்கரசர் - தேவாரம் -எத் தாயர், எத் தந்தை,  (திருவானைக்கா)  
6.063 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி  (திருவானைக்கா)  
6.064 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
6.065 திருநாவுக்கரசர் - தேவாரம் -உரித்தவன் காண், உரக் களிற்றை  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
6.066 திருநாவுக்கரசர் - தேவாரம் -தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்  (திருநாகேச்சரம்)  
6.067 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்  (திருக்கீழ்வேளூர்)  
6.068 திருநாவுக்கரசர் - தேவாரம் -கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
6.069 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,  (திருப்பள்ளியின் முக்கூடல்)  
6.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,  (பொது -க்ஷேத்திரக்கோவை)  
6.071 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்  (பொது -அடைவுத் திருத்தாண்டகம்)  
6.072 திருநாவுக்கரசர் - தேவாரம் -அலை ஆர் புனல் கங்கை  (திருவலஞ்சுழி)  
6.073 திருநாவுக்கரசர் - தேவாரம் -கருமணி போல் கண்டத்து அழகன்  (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும்)  
6.074 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்  (திருநாரையூர்)  
6.075 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல் மலிந்த மறைநான்கு ஆறு  (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்)  
6.076 திருநாவுக்கரசர் - தேவாரம் -புரிந்து அமரர் தொழுது ஏத்தும்  (திருப்புத்தூர்)  
6.077 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாட அடியார், பரவக் கண்டேன்;  (திருவாய்மூர்)  
6.078 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்  (திருவாலங்காடு (பழையனூர்))  
6.079 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்  (திருத்தலையாலங்காடு)  
6.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாரானை; பாரினது பயன் ஆனானை;  (திருமாற்பேறு)  
6.081 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண் தலம் சேர் நெற்றி  (திருக்கோடி (கோடிக்கரை))  
6.082 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
6.083 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண் ஆகி, நிலன் ஆகி,  (திருப்பாசூர்)  
6.084 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,  (திருச்செங்காட்டங்குடி)  
6.085 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆர்த்தான் காண், அழல் நாகம்  (திருமுண்டீச்சுரம்)  
6.086 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்  (திருஆலம்பொழில்)  
6.087 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானவன் காண்; வானவர்க்கும் மேல்  (திருச்சிவபுரம்)  
6.088 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆர் ஆரும் மூ இலை  (திருஓமாம்புலியூர்)  
6.089 திருநாவுக்கரசர் - தேவாரம் -அல்லி மலர் நாற்றத்து உள்ளார்  (திருஇன்னம்பர்)  
6.090 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூ இலை நல் சூலம்  (திருக்கஞ்சனூர்)  
6.091 திருநாவுக்கரசர் - தேவாரம் -பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்  (திருவெறும்பூர்)  
6.092 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூ இலை வேல் கையானை,  (திருக்கழுக்குன்றம்)  
6.093 திருநாவுக்கரசர் - தேவாரம் -நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  (பலவகைத் திருத்தாண்டகம்)  
6.094 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரு நிலன் ஆய், தீ  (நின்றத் திருத்தாண்டகம்)  
6.095 திருநாவுக்கரசர் - தேவாரம் -அப்பன் நீ, அம்மை நீ,  (பொது -தனித் திருத்தாண்டகம்)  
6.096 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்  (பொது -தனித் திருத்தாண்டகம்)  
6.097 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டம் கடந்த சுவடும் உண்டோ?  (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம்)  
6.098 திருநாவுக்கரசர் - தேவாரம் -நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;  (பொது - மறுமாற்றம்)  
6.099 திருநாவுக்கரசர் - தேவாரம் -எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,  (திருப்புகலூர்)  

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.001  
அரியானை, அந்தணர் தம் சிந்தை  
Tune - பெரியதிருத்தாண்டகம்   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

[1]
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்,
கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத்,
திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ்
உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற
பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத
நாள் எல்லாம் பிறவா நாளே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.002  
மங்குல் மதி தவழும் மாட  
Tune - புக்கதிருத்தாண்டகம்   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்; மருகல் உள்ளார்;
கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின் உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து   உள்ளார்; தக்களூரார்-
பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[1]
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி செய்யும் தொண்டர்தங்கள்
ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்-
வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று தாம் ஏறி, வேதகீதர்,
பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.003  
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,  
Tune - ஏழைத்திருத்தாண்டகம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: Goddess: )

வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை,
பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[1]
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை
கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.004  
சந்திரனை மா கங்கைத் திரையால்  
Tune - அடையாளத்திருத்தாண்டகம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.

[1]
எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே;
கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி
கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே; சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.005  
எல்லாம் சிவன் என்ன நின்றாய்,  
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: Goddess: )

எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.

[1]
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.006  
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)  
Tune - குறிஞ்சி   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி
திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[1]
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
  அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.007  
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,  
Tune - காப்புத்திருத்தாண்டகம்   (Location: திருவதிகை வீரட்டானம் God: Goddess: )

செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
  நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.

[1]
சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
வாஞ்சியமும், திரு நள்ளாறும்,
அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும்,
ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும்,
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்)
 இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்,
கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க்
கரக்கோயில்-காப்புக்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.008  
விற்று ஊண் ஒன்று இல்லாத  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்காளத்தி God: காளத்திநாதர் Goddess: ஞானப்பூங்கோதையாரம்மை)

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்,
  வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண்,
மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப்
பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான்
காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண
  நாதன் காண்;அவன் என் கண் உளானே.

[1]
இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்;
  ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்;
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்;
 குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்;
மறை உடைய வானோர் பெருமான் தான் காண்;
  மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்;
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.009  
வண்ணங்கள் தாம் பாடி, வந்து  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாமாத்தூர் God: அழகியநாதேசுவரர் Goddess: அழகியநாயகியம்மை)

வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து,
  வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது
  ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்;
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல்
 உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

[1]
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும்;மணி
 மிழலை மேய மணாளர் போலும்;
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்;
  கொடுகொட்டி, தாளம், உடையார் போலும்;
செழுங் கயிலாயத்து எம் செல்வர் போலும்;
 தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும்;
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் -
அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.010  
நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்  பூண்டார்;நூல்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்பந்தணைநல்லூர் God: பசுபதீசுவரர் Goddess: காம்பன்னதோளியம்மை)

நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்
பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்;
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை
சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி;
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல்
கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்;
பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[1]
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்;
காரோணம் காதலார்; காதல்செய்து
நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்;
  நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;
மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள்
  அரக்கர்கோன் தலையை மாளச் செற்று,
பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி
ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.011  
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்புன்கூரும் திருநீடூரும் God: சிவலோகநாதர், சோமநாதேசுவரர் Goddess: சொக்கநாயகியம்மை)

பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பேணாதார் அவர் தம்மைப் பேணாதானை,
துறவாதே கட்டு அறுத்த சோதியானை, தூ
  நெறிக்கும் தூ நெறி ஆய் நின்றான் தன்னை;
திறம் ஆய எத்திசையும் தானே ஆகித் திருப்
புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிறம் ஆம் ஒளியானை, நீடூரானை,-நீதனேன்
என்னே நான் நினையா ஆறே!.

[1]
இகழும் ஆறு எங்ஙனே? ஏழைநெஞ்சே! இகழாது   பரந்து ஒன்று ஆய் நின்றான் தன்னை,
நகழ மால்வரைக்கீழ் இட்டு, அரக்கர்கோனை
நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான் தன்னை,
திகழும் மா மதகரியின் உரி போர்த்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிகழுமா வல்லானை, நீடூரானை,-நீதனேன் என்னே   நான் நினையா ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.012  
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)

ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார்,
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[1]
பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,
ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.013  
கொடி மாட நீள் தெருவு  
Tune - குறிஞ்சி   (Location: திருப்புறம்பயம் God: சாட்சிவரதநாதர் Goddess: கரும்பன்னசொல்லம்மை)

கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும்,
நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக;
படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள்
பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

[1]
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயக(ன்)னும்,
பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி அளந்தானும், போற்று இசைப்ப;
பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி,
பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.014  
நினைந்து உருகும் அடியாரை நைய  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநல்லூர் God: பெரியாண்டேசுவரர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[1]
பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக் கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்; உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.015  
குருகு ஆம்; வயிரம் ஆம்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கருகாவூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[1]
பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள்
இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய்,
செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை
குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்;
அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி
இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி;
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.016  
சூலப்படை உடையார் தாமே போலும்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)

சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த
திங்கள் கண்ணி உடையார் போலும்;
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்;
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்;
வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்;
மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்;
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[1]
கொன்றை அம் கூவிள மாலை தன்னைக்
   குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும்,
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு
உருவம் ஆய் நின்ற நிமலனாரும்,
அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ
அரு வரையைக் காலால் அழுத்தினாரும்,
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது
மேவிய ஈசனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.017  
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)

ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்;
படை உடையர்; அம் பொன்தோள் மேல்
நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம்
பலி கொள்வர்; மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள்
தால வேடத்தர்; கொள்கை சொல்லின்,
ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது
மேவி இடம் கொண்டாரே.

[1]
விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; 
விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்;
மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்;  மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்;
சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று 
செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், 
வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.018  
வடி ஏறு திரிசூலம் தோன்றும்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்பூவணம் God: பூவணநாதர் Goddess: மின்னாம்பிகையம்மை)

வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;
வளர்  சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; 
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
  எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்  திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[1]
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,
அன்று, தன்  முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும்
குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.019  
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)

முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்
வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும், வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ  முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[1]
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்   சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்   தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.020  
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநள்ளாறு God: தெர்ப்பாரணியர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)

ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத   சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்   அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[1]
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி,
உறவு ஆகி, இன் இசை கேட்டு, இரங்கி, மீண்டே உற்ற பிணி தவிர்த்து, அருள வல்லான் தன்னை;
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை; மா மதியம், மலர்க் கொன்றை, வன்னி, மத்தம்,
நறவு, ஆர் செஞ்சடையானை; நள்ளாற்றானை;-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.021  
முடித் தாமரை அணிந்த மூர்த்தி  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருஆக்கூர் God: சுயம்புநாதவீசுவரர் Goddess: கட்கநேத்திராம்பிகை)

முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[1]
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.022  
பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)

பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை, பைஞ்ஞீலியானை,
சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும் திருமுடிமேல்-திங்கள் சூடிப்
பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர் தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,-
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[1]
மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும், மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்,
சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய்   என்று கருதாதே, போத, -நெஞ்சே!-
பனைஉரியைத் தன் உடலில் போர்த்த எந்தை-அவன் பற்றே பற்று ஆகக் காணின் அல்லால்,
கனைகடலின் தெண்கழி சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே?.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.023  
தூண்டு சுடர் அனைய சோதி  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்; தொல் அமரர் சூளா மணிதான் கண்டாய்;
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்;
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்; மெய்ந் நெறி கண்டாய்; விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[1]
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம்,
ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்;
துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்;
பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்;
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.024  
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்;
அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்;
எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்;
செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

[1]
பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்; புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்; மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்;
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-;
இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்;
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.025  
உயிரா வணம் இருந்து, உற்று  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி, உள்ளக்கிழியின் உரு எழுதி,
உயிர் ஆவணம் செய்திட்டு, உன் கைத் தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி, வாழ்தி;
அயிராவணம் ஏறாது, ஆன் ஏறு ஏறி, அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட
அயிராவணமே! என் அம்மானே! நின் அருள்   கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.

[1]
நல்லூரே நன்று ஆக நட்டம் இட்டு, நரை ஏற்றைப் பழையாறே பாய ஏறி,
பல் ஊரும் பலிதிரிந்து, சேற்றூர் மீதே,-பலர் காண.-தலையாலங்காட்டின் ஊடே,
இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி,
இராப் பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு(வ்),
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண, இறைப்பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.026  
பாதித் தன் திரு உருவில்  
Tune -   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை, பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை,
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை,
வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை,
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை, சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை,
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை,  -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.027  
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற    
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற   புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள்
இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர்
தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த்  தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்;
இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.

[1]
சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித் துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச்
செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க,
தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்)
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.028  
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்;
காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்;
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்;
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

[1]
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்; ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்; பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்; உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, அஞ்சல்! என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.029  
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை, பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

[1]
சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண் இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை,
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான்தன்னை,
ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.030  
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்;
வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்;
வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்-
செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

[1]
செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்; தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ,
மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்; வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்;
அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும், ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு
ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.031  
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
வா! ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்! என்றும்,
சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ! என்றும், தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா! என்றும்,
கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா! என்றும், கலைமான் மறி ஏந்து கையா! என்றும்,
அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.

[1]
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது, நெஞ்சே!
சலம் கொள் சடைமுடி உடைய தலைவா! என்றும், தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய்! என்றும்,
இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா!  என்றும், எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய்! என்றும்,
நலம் கொள் அடி என் தலைமேல் வைத்தாய்!   என்றும், நாள்தோறும் நவின்று ஏத்தாய்! நன்மை ஆமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.032  
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!  
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[1]
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி!
பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி!
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி!
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!
அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி!
அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும்,
சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.033  
பொரும் கை மதகரி உரிவைப்  
Tune - அரநெறிதிருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை, பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை,
கரும்பு தரு கட்டியை, இன் அமிர்தை, தேனை, காண்பு அரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை,
இருங் கனகமதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும்
அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

[1]
பகலவன் தன் பல் உகுத்த படிறன் தன்னை,   பராய்த்துறை பைஞ்ஞீலி இடம் பாவித்தானை,
இகலவனை, இராவணனை இடர் செய்தானை, ஏத்தாதார் மனத்து அகத்துள் இருள் ஆனானை,
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம்   பொருந்திய எம்பெருமானை, போற்றார் சிந்தை
அகலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.034  
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர்   உருவே மூ உருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?  காமனையும் கண் அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
 நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

[1]
ஈசனாய், உலகு ஏழும் மலையும் ஆகி, இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ? மதயானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ? சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.035  
தூண்டு சுடர் மேனித் தூநீறு  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)

தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி, ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள் அவை தாழ, புரி வெண்நூலர்,
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார்,
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி;   வெண்காடு மேவிய விகிர்தனாரே.

[1]
மாக் குன்று எடுத்தோன்தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத் தேவர் எல்லாம் நிற்க நொடிவரையில் நோவ விழித்தான் தன்னை;
காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக் கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி,
வீக்கம் தவிர்த்த விரலார்போலும் வெண்காடு   மேவிய விகிர்தனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.036  
அலை ஆர் கடல் நஞ்சம்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[1]
விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே; விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே;
புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி, நெய்த்தானம், மேயார் தாமே;
அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே; அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே;
படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.037  
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே! என்றேன், நானே;
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்   பூதப்பல் படையாய்! என்றேன், நானே;
பேர் ஆயிரம் உடையாய்! என்றேன், நானே; பிறை சூடும் பிஞ்ஞகனே! என்றேன், நானே;
ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[1]
வில் ஆடி வேடனே! என்றேன், நானே; வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்! என்றேன், நானே;
சொல் ஆய சூழலாய்! என்றேன், நானே; சுலா ஆய தொன்னெறியே! என்றேன், நானே;
எல்லாம் ஆய் என் உயிரே! என்றேன், நானே; இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்! என்றேன், நானே;
அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.038  
ஓசை ஒலி எலாம் ஆனாய்,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[1]
விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;
தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே   திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.039  
நீறு ஏறு திருமேனி உடையான்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருமழபாடி God: வச்சிரத்தம்பேசுவரர் Goddess: அழகாம்பிகையம்மை)

நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்   ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே.

[1]
ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்; ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்;
விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்; விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்;
இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்;
மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி   மன்னும் மணாளன் தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.040  
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருமழபாடி God: வச்சிரத்தம்பேசுவரர் Goddess: அழகாம்பிகையம்மை)

அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்   திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.041  
வகை எலாம் உடையாயும் நீயே  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)

வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான் கயிலை மேவினாய் நீயே என்றும்,
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு மேவினாய் நீயே என்றும்,
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும், பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்,
திகை எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[1]
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்; வான் கயிலை மேவினாய் நீயே என்றும்;
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும்; வீழிமிழலையாய் நீயே என்றும்;
அறத்தாய், அமுது ஈந்தாய் நீயே என்றும்; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு,
பொறுத்தாய், புலன் ஐந்தும், நீயே என்றும்; நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.042  
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)

மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம்
இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே!
மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய
நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[1]
உரித்து அன்று, உனக்கு இவ் உடலின் தன்மை; உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்;
எரி(த்)த்தான்; அனல் உடையான்; எண்தோளானே! எம்பெருமான்! என்று ஏத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.043  
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்பூந்துருத்தி God: புஷ்பவனநாதர் Goddess: அழகாலமர்ந்தநாயகி)

நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை;
கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை;
சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு,
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.

[1]
மறுத்தானை, மலை கோத்து அங்கு எடுத்தான் தன்னை, மணி முடியோடு இருபது தோள் நெரியக் காலால்
இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; எண்   திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை
அறுத்தானை; அமரர்களுக்கு அமுது ஈந்தானை; யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.044  
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகை)

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம் படைக்கின்றானே!
ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே! இன்பனாய்த் துன்பம் களைகின்றானே!
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[1]
மை அனைய கண்டத்தாய்! மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே! கடி இலங்கைக் கோனை, அன்று, கால்   விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற
மெய்யவனே! அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே! விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.045  
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி,
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர நடம் ஆடி, சிவலோக(ன்)னார்
உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்;
கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என்
தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.

[1]
மரு உற்ற மலர்க் குழலி மடவாள் அஞ்ச, மலை துளங்கத் திசை நடுங்கச் செறுத்து நோக்கி,
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள, திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி,
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ் ஒள் அழலார் இங்கே வந்து,
திரு ஒற்றியூர், நம் ஊர் என்று போனார்; செறி வளைகள் ஒன்று ஒன்றாய்ச் சென்ற ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.046  
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)

நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,   நன்மை தன்னை,
கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய் அடியார்கட்கு அருள் செய்வானை,
செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீயை, நீரை,
அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[1]
பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை, பாடலோடு ஆடல் பயின்றான் தன்னை,
கொந்து அணவு நறுங்கொன்றை மாலையானை, கோல மா நீலமிடற்றான் தன்னை,
செந்தமிழோடு ஆரியனை, சீரியானை, திரு மார்பில் புரி வெண்நூல் திகழப் பூண்ட
அந்தணனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.047  
திருவே, என் செல்வமே, தேனே,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)

திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் சோதி மிக்க
உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய்,
அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்! ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[1]
துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்;
பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே;
செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச்
 செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம்
அறிந்தேன்; அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.048  
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவலிவலம் God: மனத்துணைநாதர் Goddess: வாளையங்கண்ணியம்மை)

நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண், நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண், மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச்
சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[1]
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த படியானும், பரவிக் காணாது
அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல் அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய
மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.049  
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருகோகர்ணம் (கோகர்ணா) God: மாபலநாதர் Goddess: கோகரணநாயகியம்மை)

சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்;
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்;
பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்;
மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

[1]
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள் நெரிய ஊன்றினான் காண்;
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்;
பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப் படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்;
மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.050  
போர் ஆனை ஈர் உரிவைப்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே   உடை ஆடை போற்றினானை,
பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்-
தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

[1]
அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை; அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; இந்து வினைத் தேய்த்தானை; இரவிதன் பல்
பறித்தானை; பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆகச்
செறித்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.051  
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து உளார்; காளத்தி(ய்)யார்;
மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்; சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த
அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும் திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி,
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே.

[1]
அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்;
புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத் தேன் இசை ஆர் கீதர்;
விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.052  
கண் அவன் காண்; கண்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்; கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற
பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்; பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்;
மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்; வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர்
விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

[1]
ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்; கைம்மாவின் உரி போர்த்தான் காண்;
ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய் நின்றான் காண்; ஓங்காரன் காண்;
கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்; கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்;
வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.053  
மான் ஏறு கரம் உடைய  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால்   வளை வில்லா வளைத்தார் போலும்;
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி, துடி, கைக் கொண்டார் போலும்;
தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்;
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

[1]
கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்; கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்;
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்; ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்;
விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்;
அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.054  
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) God: வைத்தியநாதர் Goddess: தையல்நாயகியம்மை)

ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற  நாள் போக்கினேனே!.

[1]
இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை;
அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை;   கனல், மழுவும், கலையும், அங்கை
பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.055  
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி  
Tune - குறிஞ்சி   (Location: திருக்கயிலாயம் God: கயிலாயநாதர் Goddess: பார்வதியம்மை)

வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[1]
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி!
நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி!
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி!
கடிய உருமொடு மின்னே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.056  
பொறை உடைய பூமி, நீர்,  
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (Location: திருக்கயிலாயம் God: கயிலாயநாதர் Goddess: பார்வதியம்மை)

பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[1]
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.057  
பாட்டு ஆன நல்ல தொடையாய்,  
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (Location: திருக்கயிலாயம் God: கயிலாயநாதர் Goddess: பார்வதியம்மை)

பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.058  
மண் அளந்த மணி வண்ணர்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவலம்புரம் God: வலம்புரநாதர் Goddess: வடுவகிர்க்கணம்மை)

மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக் கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே?
பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[1]
செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும் சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு,
பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ,
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி,
அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.059  
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவெண்ணியூர் God: வெண்ணிநாயகர் Goddess: அழகியநாயகியம்மை)

தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும், தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்,
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்,
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[1]
பொன் இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடிப்   புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்,
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும், குளிர் ஆர்ந்த செஞ்சடை எம் குழகனாரும்,
தென் இலங்கை மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள் செய்தாரும்,
மின் இலங்கு நுண் இடையாள் பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.060  
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) God: முத்தீசர் Goddess: அஞ்சனாட்சியம்மை)

மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;  திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று
ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக
அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்
காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;   கண் ஆரக் கண்டேன், நானே.

[1]
பொழிலானை, பொழில் ஆரும் புன்கூரானை, புறம் பயனை, அறம் புரிந்த புகலூரானை,
எழிலானை, இடை மருதின் இடம் கொண்டானை, ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன் தன்னை,
அழல் ஆடு மேனியனை, அன்று சென்று அக் குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.061  
மாதினை ஓர் கூறு உகந்தாய்!  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கன்றாப்பூர் God: நடுதறிநன்னாயகர் Goddess: மாதுமைநாயகியம்மை)

மாதினை ஓர் கூறு உகந்தாய்! மறை கொள் நாவா! மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம்
நாதனே! என்று என்று பரவி, நாளும் நைந்து உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து,
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு, வைகல் மறவாது, வாழ்த்தி, ஏத்தி,
காதன்மையால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.062  
எத் தாயர், எத் தந்தை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)

எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார், எம் மாடு சும்மாடு? ஏவர் நல்லார்?
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறு விறகால்-தீ மூட்டிச் செல்லா நிற்பர்;
சித்து ஆய வேடத்தாய்! நீடு பொன்னித் திரு ஆனைக்கா உடைய செல்வா! என்தன்
அத்தா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[1]
கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம் கூத்து ஆட, நீயும் ஆடி,
வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில் ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்!
படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப் பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.063  
முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)

முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,
தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு அரியானை; தாதை தன்னை;
என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை; எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ்
தென் ஆனைக்காவானை; தேனை; பாலை;   செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

[1]
பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள்   தம் பெருமானை; திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே
தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.064  
கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த  
Tune - திருத்தாண்டகம்   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண், குவலயன் காண், குவலயத்தின் நீர் ஆனான் காண்,
காற்று அவன் காண், கனல் அவன் காண், கலிக்கும் மின் காண், கன பவளச்செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன் காண், நிலா ஊரும் சென்னியான் காண், நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர்சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[1]
வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான் காண்; வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி,
விம்மா நின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்; விடை ஏறித் திரிவான் காண்; நடம் செய் பூதத்து
அம்மான் காண்; அகலிடங்கள் தாங்கினான் காண்; அற்புதன் காண்; சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.065  
உரித்தவன் காண், உரக் களிற்றை  
Tune - திருத்தாண்டகம்   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம்
விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்; வியன் உலகில் பல் உயிரை விதியினாலே
தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[1]
பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான் காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண், சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண்
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில்
இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன், கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.066  
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநாகேச்சரம் God: சண்பகாரண்ணியேசுவரர் Goddess: குன்றமுலைநாயகியம்மை)

தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[1]
சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை;
பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ; பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை;
ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம்
தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.067  
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கீழ்வேளூர் God: அட்சயலிங்கநாதர் Goddess: வனமுலைநாயகியம்மை)

ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை, சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[1]
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான் தானும் முதுகு இற, முன்கைந் நரம்பை எடுத்துப் பாட,
பறிப்பான் கைச் சிற்றரிவாள் நீட்டினானை; பாவியேன் நெஞ்சு அகத்தே பாதப் போது
பொறித்தானை; புரம் மூன்றும் எரி செய்தானை; பொய்யர்களைப் பொய் செய்து போது போக்கிக்
கிறிப்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;   கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.068  
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)

கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை,
குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை, கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை,
அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை,   தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

[1]
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி, எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டு,
புகழ்ந்தானை; பூந்துருத்தி மேயான் தன்னை; புண்ணியனை; விண்ணவர்கள் நிதியம் தன்னை;
மகிழ்ந்தானை, மலைமகள் ஓர்பாகம் வைத்து; வளர் மதியம் சடை வைத்து, மால் ஓர்பாகம்
திகழ்ந்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.069  
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்பள்ளியின் முக்கூடல் God: முக்கோணவீசுவரர் Goddess: மைமேவுங்கண்ணியம்மை)

ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,   அயனொடு மால் அறியாத ஆதியானை,
தார் ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை, சங்கரனை, தன் ஒப்பார் இல்லாதானை,
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நீள் விசும்பு ஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

[1]
தடுத்தானைத் தான் முனிந்து தன் தோள் கொட்டித்   தடவரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி, எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு,
கொடுத்தானை, பேரோடும் கூர்வாள் தன்னை; குரை கழலால் கூற்றுவனை மாள, அன்று,
படுத்தானை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.070  
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,  
Tune - தக்கேசி   (Location: பொது -க்ஷேத்திரக்கோவை God: Goddess: )

தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

[1]
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,   ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,   கயிலாய நாதனையே காணல் ஆமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.071  
பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்  
Tune - திருத்தாண்டகம்   (Location: பொது -அடைவுத் திருத்தாண்டகம் God: Goddess: )

பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து, புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்-
கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல்
சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர்
பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே.

[1]
நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும்,
தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம்,
விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா;
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.072  
அலை ஆர் புனல் கங்கை  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவலஞ்சுழி God: காப்பகத்தீசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்
தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும் மேவி, விடையை மேற்கொண்டு,
இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த,
மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.073  
கருமணி போல் கண்டத்து அழகன்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் God: கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் Goddess: பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை)

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்;
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[1]
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்;
தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு ஆய் நீண்ட கழலான் கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்   கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.074  
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருநாரையூர் God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்   ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை,
அல்லானை, பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த
வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை, வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

[1]
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை, வெளி செய்த வழிபாடு மேவினானை,
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை,
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.075  
சொல் மலிந்த மறைநான்கு ஆறு  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் God: மடந்தைபாகேசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)

சொல் மலிந்த மறைநான்கு ஆறு அங்கம் ஆகிச் சொல் பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்;
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்;
மல் மலிந்த மணி வரைத்திண் தோளர் போலும்; மலை அரையன் மடப்பாவை மணாளர் போலும்;
கொன் மலிந்த மூ இலைவேல் குழகர் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

[1]
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை   இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க்
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.076  
புரிந்து அமரர் தொழுது ஏத்தும்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்புத்தூர் God: புத்தூரீசர் Goddess: சிவகாமியம்மை)

புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன்
காண், போர் விடையின் பாகன் காண், புவனம் ஏழும்
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண், விரைக் கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும்
தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டோன்
காண், தீர்த்தன் காண், திருமால் ஓர் பங்கத்தான் காண்
திருந்து வயல் புடை தழுவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[1]
உரம் மதித்த சலந்தரன் தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண், உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனைப் பல் கொண்டான் காண், வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் காண்,
அர மதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண், அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்
சிரம் நெரித்த சேவடி காண் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.077  
பாட அடியார், பரவக் கண்டேன்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாய்மூர் God: வாய்மூரீசுவரர் Goddess: பாலினுநன்மொழியம்மை)

பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை   அனல் கண்டேன்; கங்கையாளைக்
கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்;
வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

[1]
கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட   காரணமும் கண்டேன்; கரு ஆய் நின்று,
பலங்கள் தரித்து, உகந்த பண்பும் கண்டேன்; பாடல் ஒலி எலாம் கூடக் கண்டேன்;
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து, அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்;
வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.078  
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவாலங்காடு (பழையனூர்) God: ஊர்த்ததாண்டவேசுவரர் Goddess: வண்டார்குழலியம்மை)

ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

[1]
மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;   வண் கயிலை மா மலையை வந்தியாத,
நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே;
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.079  
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருத்தலையாலங்காடு God: ஆடவல்லவீசுவரர் Goddess: திருமடந்தையம்மை)

தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை, சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை,
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை, ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை,
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை, மூ உருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற
தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.

[1]
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான் கயிலை மலை அது தன்னைக் கருதாது ஓடி,
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும், திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப,
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு, பரிந்து,   அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத்
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.080  
பாரானை; பாரினது பயன் ஆனானை;  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)

பாரானை; பாரினது பயன் ஆனானை; படைப்பு   ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை;
ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு, அனைத்து உலகும் ஆனானை; அமரர் கோனை;
கார் ஆரும் கண்டனை; கயிலை வேந்தை; கருதுவார் மனத்தானை; காலற் செற்ற
சீரானை; செல்வனை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

[1]
விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்; வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை
தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.081  
கண் தலம் சேர் நெற்றி  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கோடி (கோடிக்கரை) God: கோடீசுவரர் Goddess: வடிவாம்பிகையம்மை)

கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;
விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.082  
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருச்சாய்க்காடு (சாயாவனம்) God: சாயவனேசுவரர் Goddess: குயிலின்நன்மொழியம்மை)

வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்;
ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்;
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[1]
உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால்  ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச,
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்;
பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்;
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.083  
விண் ஆகி, நிலன் ஆகி,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்பாசூர் God: பாசூர்நாதர் Goddess: பசுபதிநாயகியம்மை)

விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி, வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற
கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

[1]
வேந்தன், நெடு முடி உடைய அரக்கர் கோமான், மெல்லியலாள் உமை வெருவ, விரைந்திட்டு, ஓடி,
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளால் எடுத்திடலும், தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து, அவன் தன் இசை கேட்டு, இரக்கம் கொண்ட,
பாந்தள் அணி சடைமுடி, எம் பாசூர் மேய, பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.084  
பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருச்செங்காட்டங்குடி God: கணபதீசுவரர் Goddess: திருக்குழல்மாதம்மை)

பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி
அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை, அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[1]
போர் அரவம் மால்விடை ஒன்று ஊர்தியானை, புறம் பயமும் புகலூரும் மன்னினானை,
நீர் அரவச் செஞ்சடை மேல் நிலா வெண்திங்கள்   நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை,
பேர் அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப் பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடியச் செற்ற
சீர் அரவக் கழலானை, செல்வன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.085  
ஆர்த்தான் காண், அழல் நாகம்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருமுண்டீச்சுரம் God: முண்டீசுவரர் Goddess: கானார்குழலியம்மை)

ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான் காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்;
காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம், கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே!
சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.086  
கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருஆலம்பொழில் God: ஆத்மநாதீசுவரர் Goddess: ஞானாம்பிகையம்மை)

கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை, கமலத்தோன்   தலை அரிந்த காபாலி(ய்)யை,
உரு ஆர்ந்த மலை மகள் ஓர் பாகத்தானை, உணர்வு எலாம் ஆனானை, ஓசை ஆகி
வருவானை, வலஞ்சுழி எம் பெருமான் தன்னை, மறைக்காடும் ஆவடு தண்துறையும் மேய
திருவானை, தென்பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.087  
வானவன் காண்; வானவர்க்கும் மேல்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருச்சிவபுரம் God: பிரமபுரிநாயகர் Goddess: பெரியநாயகியம்மை)

வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்; வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன் காண்; கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்;   கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.088  
ஆர் ஆரும் மூ இலை  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருஓமாம்புலியூர் God: துயர்தீர்த்தசெல்வர் Goddess: பூங்கொடியம்மை)

ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை ஆளா உடையான் தன்னை;
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.089  
அல்லி மலர் நாற்றத்து உள்ளார்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருஇன்னம்பர் God: எழுத்தறிந்தவீசுவரர் Goddess: கொந்தார்பூங்குழலம்மை)

அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்;
சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்;
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்;
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[1]
அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும்;
வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்;
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து, மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று,
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.090  
மூ இலை நல் சூலம்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கஞ்சனூர் God: அக்கினீசுவரர் Goddess: கற்பகநாயகியம்மை)

மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை, மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை,
நாவலனை, நரை விடை ஒன்று ஏறுவானை, நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன் திருமால் ஆனானை, அனலோன் போற்றும்
காவலனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

[1]
மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண்   இடந்து இடுதலுமே, மலி வான் கோலச்
சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி உரி போர்த்தானை; தோழன் விட்ட
அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு
வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்-
கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை;   கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.091  
பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருவெறும்பூர் God: Goddess: )

பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்; எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய-
தன்னையும் தன் திறத்து அறியாப் பொறி இலேனைத் தன் திறமும் அறிவித்து, நெறியும் காட்டி,
அன்னையையும் அத்தனையும் போல, அன்பு ஆய் அடைந்தேனைத் தொடர்ந்து, என்னை ஆளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[1]
அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல் அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்
முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட,
இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை; கைம்மாவின் உரிவை போர்த்த,
திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை; செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.092  
மூ இலை வேல் கையானை,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருக்கழுக்குன்றம் God: வேதகிரீசுவரர் Goddess: பெண்ணினல்லாளம்மை)

மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு   உடையானை, முதல் ஆனானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை,
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை,   கண் ஆரக் கண்டேன், நானே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.093  
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  
Tune - திருத்தாண்டகம்   (Location: பலவகைத் திருத்தாண்டகம் God: Goddess: )

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர ஆயிரம் மா முகத்தினோடு
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்-
தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீர் ஆகில், பொல்லாப் புலால்-துருத்தி போக்கல் ஆமே.

[1]
தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்? புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.094  
இரு நிலன் ஆய், தீ  
Tune - புறநீர்மை   (Location: நின்றத் திருத்தாண்டகம் God: Goddess: )

இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே!.

[1]
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே ஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே ஆகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.095  
அப்பன் நீ, அம்மை நீ,  
Tune - திருத்தாண்டகம்   (Location: பொது -தனித் திருத்தாண்டகம் God: Goddess: )

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

[1]
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து | தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,| மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் | ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,| அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.096  
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்  
Tune - திருத்தாண்டகம்   (Location: பொது -தனித் திருத்தாண்டகம் God: Goddess: )

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம்   கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்;
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.

[1]
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்   வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.097  
அண்டம் கடந்த சுவடும் உண்டோ?  
Tune - திருத்தாண்டகம்   (Location: பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் God: Goddess: )

அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ?
பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள்   பல சூழப் போந்தது உண்டோ?
கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின்   மேல் கண் ஒன்று கண்டது உண்டோ?
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.

[1]
மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான்,
வார்சடையான் என்னின், அல்லான்;
ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர்
ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி;
அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன்
அருளே கண் ஆகக் காணின் அல்லால்,
இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன்
இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.098  
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;  
Tune - திருத்தாண்டகம்   (Location: பொது - மறுமாற்றம் God: Goddess: )

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்; இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன், நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க் கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

[1]
நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
ஆவா! என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, குற்றேவல் செய்க என்றாலும், குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 - Thirumurai   Pathigam 6.099  
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,  
Tune - திருத்தாண்டகம்   (Location: திருப்புகலூர் God: அக்கினீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்?
கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன்,
கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்;
ஒக்க   அடைக்கும் போது உணர மாட்டேன்;
புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[1]
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்;
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி,
இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக்
கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற
பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

[10]

This page was last modified on Sun, 10 Mar 2024 22:40:27 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai number