சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.087   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்பனையூர் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சவுந்தரேசர் திருவடிகள் போற்றி
புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், மாட மாளிகை எனறு திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுதார்.
நிறைய பண வரவு பொன் கிடைக்க
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=L0HnSKSQwqk   Add audio link Add Audio

மாட மாளிகை கோபு ரத்தொடு
மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை
தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்
றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே

1

நாறு செங்கழு நீர்ம லர்
நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
நீறு பூசிநெய் யாடித் தம்மை
நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்
றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே

2

செங்கண் மேதிகள் சேடெ றிந்து
தடம்ப டிதலிற் சேலி னத்தொடு
பைங்கண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னாரடி
யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே

3

வாளை பாய மலங்கி ளங்கயல்
வரிவ ராலுக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்
டாடு வாரடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே

4

கொங்கை யார்பல ருங்கு டைந்ந்
தாட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மாலொர் பாகமுந்
தாமுடையவர் மான்ம ழுவினொ
டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே

5
Go to top

காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
தாம்ப ரவிய கருணை யங்கடற்
பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர்
மாவிரிமட நோக்கி அஞ்ச
மதக ரியுரி போர்த்து கந்தவர்
ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே

6

மரங்கள் மேல்மயி லால மண்டப
மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாய்பிளந் தானுந் தூமலர்த்
தோன்ற லும்மறி யாமை தோன்றிநின்
றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே

7

மண்ணி லாமுழ வம்ம திர்தர
மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்தி ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே

8

குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக்
குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை
தோளி ருபது தாள்நெ ரிதர
அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே

9

வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பனையூர்
1.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரவச் சடை மேல் மதி,
Tune - தக்கராகம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
7.087   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
Tune - சீகாமரம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org