சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?
|
1
|
சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக. | |
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி,
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே?
|
2
|
வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. | |
அன்பால் அடி கைதொழுவீர்! அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி,
இன்புஆய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
பொன் போல் சடையில் புனல் வைத்த பொரு
|
3
|
அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ! | |
நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி,
இச்சித்து, இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே?
|
4
|
சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சிமாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக. | |
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர்
நல் தாழ்குழல் நங்கையொடும் உடன் ஆகி,
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
புற்று ஆடு அரவோடு பூண்ட பொரு
|
5
|
சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக. | |
| Go to top |
தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர்
சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி,
ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?
|
6
|
இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக. | |
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது சொல்லீர்
பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே?
|
8
|
துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக. | |
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன் ஆகி,
இயல்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே?
|
9
|
திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதிதேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமண பௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக. | |
துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்! சொல்லீர்
பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன் ஆகி,
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே?
|
10
|
எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வேதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர். | |
| Go to top |
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.
|
11
|