திருஆலவாய் (மதுரை) - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் நுமது ஊர் எது எனக் கேட்கப் பிரமனூர் என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற
மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்
பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும்
ஊரே.
தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர்
காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
ஊரே.
தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே.
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை
நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
விருப்பு உளாரே.