சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.050   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்குறுக்கை வீரட்டம் - திருநேரிசை அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=In8Ve0q0FGA   Add audio link Add Audio

நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.

1
உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .

ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம், எம்பெருமான்! என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல,
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

2
குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் ` எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம் ` என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்குறுக்கை வீரட்டம்
4.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,
Tune - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
4.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெடிய மால் பிரமனோடு நீர்
Tune - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000