கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட உடல் உளானை, ஒப்பாரி இலாத எம் அடல் உளானை, அரத்துறை மேவிய சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
|
1
|
நாம் தொழுவது கடவுளும் , பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த , அருட்டிருமேனியுடையவனும் , ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே . | |
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை, விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.
|
2
|
நாம் தொழுவது , கரும்பும் , கரும்பினிற் கட்டியும் ஒப்பானும் , விரும்பிய பொருளை ஒப்பானும் , தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே . | |
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
|
3
|
நாம்தொழுவது ஏறு ஒப்பானும் , எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும் , தேவரும் அறியாநெறி ஒப்பானும் , அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே . | |
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
|
4
|
நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும் , இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும் , குறும்பையும் , அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே , பிறரை அன்று . | |
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர் மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
|
5
|
நாம் தொழுவது நெய்யும் , நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும் , பெருவியப்பும் போல்வானும் , தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்கமாவானுமாகிய பெருமானையே . | |
| Go to top |
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை, விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அதி ஒப்பானை, அரத்துறை மேவிய கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
|
6
|
நாம் தொழுவது நியதி ஆவானும் , நியதியின் தலைவனும் , விதியாவானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , விச்சுவாதிளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே . | |
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.
|
7
|
நாம் தொழுவது புனலும் , பொருந்தாதார்க்கு மின்னலும் . அனலும் போல்வானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே . | |
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர் மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்- அன் ஒப்பானை, அரத்துறை மேவிய தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.
|
8
|
நாம் தொழுவது , பொன்னும் , பொன்னின் சுடர் போன்ற மின்னலும் , அன்னையும் ஒப்பானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே . | |
காழியானை, கன விடை ஊரும் மெய் வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர் ஆழியான் பிரமற்கும் அரத்துறை ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.
|
9
|
நாம்தொழுவது , காழித்தலத்துக் கடவுளும் , பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும் , பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும் , ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திருஅரத்துறை அடிகளையே . | |
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை, மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய அலை ஒப்பானை, அரத்துறை மேவிய நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
|
10
|
நாம் தொழுவது கலையும் , கற்றார்க்கமுதும் , மலையும் போல்வானும் , மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும் , அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே . | |
| Go to top |