சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம் (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே | [1] |
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும், திரிந்தும், காண வல்லரோ- மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து- ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன், அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை, தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ? | [1] |
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம் வீங்கி விம்முற ஊன்றிய தாளினான், தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை, பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநெல்வாயில் அரத்துறை God: Goddess: )
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட உடல் உளானை, ஒப்பாரி இலாத எம் அடல் உளானை, அரத்துறை மேவிய சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [1] |
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை, மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய அலை ஒப்பானை, அரத்துறை மேவிய நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.004  
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு அண்ணாமலையனை, இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும் அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ? | [1] |
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய திருத்தனை, திரு அண்ணாமலையனை, இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத் துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.005  
பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)
பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம் இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும் அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக் கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே! | [1] |
மறையினானொடு மாலவன் காண்கிலா நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப் பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.006  
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்; முப்போதும் பிரமன் தொழ நின்றவன், செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன், அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே. | [1] |
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்; காலன் ஆய அவனைக் கடந்திட்டுச் சூலம் மான்மறி ஏந்திய கையினார் ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.007  
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி, பக்கமே பகுவாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய், அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே. | [1] |
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்: வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன், அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.008  
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருஅன்னியூர் (பொன்னூர்) God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)
பாறு அலைத்த படுவெண் தலையினன்; நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய, ஆறு அலைத்த சடை, அன்னியூரனே. | [1] |
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்- அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற, பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை, அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.009  
ஓதம் மால் கடல் பரவி
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)
ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம் மாதரார் வலம்கொள் மறைக்காடரைக் காதல்செய்து, கருதப்படுமவர் பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே! | [1] |
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே மண் உளார் வணங்கும் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.011  
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமீயச்சூர் God: முயற்சிநாதேசுவரர் Goddess: சுந்தரநாயகியம்மை)
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே. | [1] |
கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற, விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர், இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.012  
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
கரைந்து கை தொழுவாரையும் காதலன்; வரைந்து வைது எழுவாரையும் வாடலன்; நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் விரைந்து போவது, வீழிமிழலைக்கே. | [1] |
பாலையாழொடு செவ்வழி பண் கொள மாலை வானவர் வந்து வழிபடும், ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி வேலையார் தொழும், வீழிமிழலையே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.013  
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல் நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்; செம்பொனே! திரு வீழிமிழலையுள் அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே! | [1] |
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம் வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய திருத்தனே! திரு வீழிமிழலையுள் அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.014  
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும், ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே. | [1] |
கனியினும், கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும், தனி முடீ கவித்து ஆளும் அரசினும், இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.015  
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம், இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.016  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பேரெயில் God: Goddess: )
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடைய கபாலியார்; துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்; பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே. | [1] |
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்; தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்; மாணியாய் மண் அளந்தவன், நான்முகன், பேணியார் அவர் பேரெயிலாளரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.017  
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவெண்ணியூர் God: வெண்ணிநாயகர் Goddess: அழகியநாயகியம்மை)
முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப் பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர் நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே. | [1] |
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்; கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்; காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம் வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.018  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கடம்பந்துறை (குளித்தலை) God: Goddess: )
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே. | [1] |
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட! பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்; காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.019  
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கடம்பூர் God: அமுதகடேசுவரர் Goddess: சோதிமின்னம்மை)
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்- கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக் களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே. | [1] |
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும், மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன், பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்- கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.020  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கடம்பூர் God: அமுதகடேசுவரர் Goddess: சோதிமின்னம்மை)
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், குரு அது ஆய குழகன், உறைவு இடம்- பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே. | [1] |
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன் உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற, இரக்கம் இன்றி இறை விரலால்-தலை அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.021  
என்னில் ஆரும் எனக்கு இனியார்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருஇன்னம்பர் God: எழுத்தறிந்தவீசுவரர் Goddess: கொந்தார்பூங்குழலம்மை)
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை; என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்; என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே. | [1] |
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடிபத்து உடையான் தனைக் கனிய ஊன்றிய காரணம் என்கொலோ, இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.022  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி
Tune - திருக்குறுந்தொகை (Location: திருகுடமூக்கு (கும்பகோணம்) God: கும்பேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு ஆவணத்து உடையான், அடியார்களை;- தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர் கோவணத்து உடையான், குடமூக்கிலே. | [1] |
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச் சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும் நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின் கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.023  
கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநின்றியூர் God: மகாலட்சுமியீசுவரர் Goddess: உலகநாயகியம்மை)
கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப் படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்- நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க் கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே. | [1] |
எளியனா மொழியா இலங்கைக்கு இறை, களியினால் கயிலாயம் எடுத்தவன், நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் அளியினால்-தொழுவார் வினை அல்குமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.024  
ஒற்றி ஊரும் ஒளி மதி,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை; ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே. | [1] |
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம், திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர், உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.025  
முந்தி மூ எயில் எய்த
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பாசூர் God: பாசூர்நாதர் Goddess: பசுபதிநாயகியம்மை)
முந்தி மூ எயில் எய்த முதல்வனார், சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார், அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்- பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே. | [1] |
மாலினோடு மறையவன் தானும் ஆய், மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்; ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப் பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.026  
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவன்னியூர் God: Goddess: )
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.027  
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்; பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்; முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே. | [1] |
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்; அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று, அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே, அரக்கினான், அடியாலும்-ஐயாறனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.028  
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர் அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே. | [1] |
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும், இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும், கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும், அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.029  
நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாவடுதுறை God: Goddess: )
நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை; மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்- பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு- துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே. | [1] |
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்; மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்; அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.030  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பராய்துறை God: திருப்பராய்த்துறைநாதர் Goddess: பசும்பொன்மயிலம்மை)
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;- பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப் பராய்த்துறை மேவிய செல்வரே. | [1] |
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும், இண்டை கட்டி இணை அடி ஏத்தியும், பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.031  
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்; ஆனைக்காவில் எம்மானை அணைகிலார், ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே. | [1] |
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை கீதம் கின்னரம் பாட, கெழுவினான், பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர் ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.032  
கொடி கொள் செல்வ விழாக்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பூந்துருத்தி God: புஷ்பவனநாதர் Goddess: அழகாலமர்ந்தநாயகி)
கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக் கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார், பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர் அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [1] |
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப் பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம் பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப் படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.033  
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகை)
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார், தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே! | [1] |
மிண்டரோடு விரவியும் வீறு இலாக் குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.034  
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன், நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச் சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே. | [1] |
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும் பரிந்தனை, பணிவார் வினை பாறுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.035  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும், பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான், திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே. | [1] |
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன், பங்கன், என்றும் பழனன், உமையொடும் தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.036  
கான் அறாத கடி பொழில்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருச்செம்பொன்பள்ளி God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான், ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி- தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே! | [1] |
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால் எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்; அரிய வானம் அவர் அருள்செய்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.037  
மலைக் கொள் ஆனை மயக்கிய
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கடவூர் வீரட்டம் God: பிரமபுரீசுவரர் Goddess: மலர்க்குழல்மின்னம்மை)
மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே! கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால், கலைக் கையானை கண்டீர்-கடவூரரே. | [1] |
நீண்ட மாலொடு நான்முகன்தானும் ஆய், காண்டும் என்று புக்கார்கள் இருவரும் ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்; காண்டல் ஆனைகண்டீர்-கடவூரரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.038  
குழை கொள் காதினர், கோவண
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கடவூர் மயானம் God: பிரமபுரீசுவரர் Goddess: மலர்க்குழல்மின்னம்மை)
குழை கொள் காதினர், கோவண ஆடையர், உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்; பழைய தம் அடியார் செய்யும் பாவமும் பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.039  
கொள்ளும் காதன்மை பெய்து உறும்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமயிலாடுதுறை God: மாயூரநாதர் Goddess: அஞ்சநாயகியம்மை)
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் வள்ளல் மா மயிலாடுதுறை உறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே. | [1] |
நீள் நிலா அரவச் சடை நேசனைப் பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்; வாள்நிலா மயிலாடுதுறைதனைக் காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.040  
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான், இவள் தன்மையே! | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.041  
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பைஞ்ஞீலி God: நீலகண்டேசுவரர் Goddess: விசாலாட்சியம்மை)
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்- படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே. | [1] |
தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம், இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.042  
நன்று நாள்தொறும் நம் வினை
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவேட்களம் God: பாசுபதேசுவரர் Goddess: நல்லநாயகியம்மை)
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்; என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்; சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை துன்று பொன்சடையானைத் தொழுமினே! | [1] |
சேடனார் உறையும் செழு மாமலை ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.043  
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநல்லம் God: உமாமகேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்! நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல் சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே. | [1] |
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி, நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால் சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.044  
மா மாத்து ஆகிய மால்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாமாத்தூர் God: அழகியநாதர் Goddess: அழகியநாயகியம்மை)
மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி; ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே. | [1] |
வானம் சாடும் மதி அரவத்தொடு தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை, தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.045  
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை (Location: சீர்காழி God: தோணியப்பர் Goddess: திருநிலைநாயகியம்மை)
மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால், நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்; சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத் தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே. | [1] |
இட்டம் ஆயின செய்வாள், என் பெண் கொடி- கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத் துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.046  
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்புகலூர் God: வர்த்தமானீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி, பொன் நக்கன்ன சடை, புகலூரரோ! மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன் என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே? | [1] |
மத்தனாய், மதியாது, மலைதனை எத்தினான் திரள் தோள் முடிபத்து இற ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும் பொத்தினான் புகலூரைத் தொழுமினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.047  
பண்டு செய்த பழவினையின் பயன்
Tune - திருக்குறுந்தொகை (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே! வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே! | [1] |
இடுகுநுண் இடை, ஏந்து இளமென்முலை, வடிவின், மாதர் திறம் மனம் வையன்மின்! பொடி கொள் மேனியன், பூம்பொழில் கச்சியுள் அடிகள், எம்மை அருந்துயர் தீர்ப்பரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.048  
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
Tune - திருக்குறுந்தொகை (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா! ஆமோ, அல்லல்பட, அடியோங்களே? | [1] |
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம், தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.049  
பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும், பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே! | [1] |
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர், சேலை ஆடிய கண் உமை பங்கனார், வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு மாலை ஆவது மாண்டவர் அங்கமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.050  
எங்கே என்ன, இருந்த இடம்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாய்மூர் God: வாய்மூரீசுவரர் Goddess: பாலினுநன்மொழியம்மை)
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ? | [1] |
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை; வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.051  
நீல மா மணிகண்டத்தர்; நீள்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பாலைத்துறை God: பாலைவனநாதர் Goddess: தவளவெண்ணகையம்மை)
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக் கோல மா மதி கங்கையும் கூட்டினார்; சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப் பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே. | [1] |
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்; அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்; செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்; பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.052  
நல்லர்; நல்லது ஓர் நாகம்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநாகேச்சரம் God: செண்பகாரணியேசுவரர் Goddess: குன்றமுலைநாயகியம்மை)
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்; வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்; பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே. | [1] |
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்; ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும் தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.053  
கோணல் மா மதி சூடி,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)
கோணல் மா மதி சூடி, ஓர் கோவண நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை; பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே? | [1] |
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்; நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால், பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.054  
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்- கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ- ரட்டனார் அடி சேருமவருக்கே. | [1] |
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு, அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து, அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ- ரட்டனார் அடி சேருமவர்களே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.055  
வீறு தான் உடை வெற்பன்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநாரையூர் God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)
வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்- கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும், நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறு சூடலும், அம்ம அழகிதே! | [1] |
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும் நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல் அடுத்த தன்மையும், அம்ம அழகிதே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.056  
மைக் கொள் கண் உமை
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கோளிலி (திருக்குவளை) God: கோளிலியப்பர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)
மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத் தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன், கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி நக்கனை, தொழ நம்வினை நாசமே. | [1] |
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள் கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ, விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.057  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கோளிலி (திருக்குவளை) God: கோளிலியப்பர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)
முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன், செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி மன்னனே, அடியேனை மறவலே! | [1] |
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.058  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பழையாறை வடதளி God: சோமேசுவரர் Goddess: சோமகலாநாயகியம்மை)
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்- நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே? அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே! | [1] |
செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.059  
பொரும் ஆற்றின் படை வேண்டி,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே. | [1] |
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத் தருக்கினால் எடுத்தானைத் தகரவே வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.060  
ஏதும் ஒன்றும் அறிவு இலர்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.061  
முத்து ஊரும் புனல் மொய்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருஅரிசிற்கரைப்புத்தூர் God: படிக்காசளித்தவீசுவரர் Goddess: அழகம்மை)
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம் மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே. | [1] |
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும் கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல், பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல் பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.062  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) God: சொர்ணபுரீசுவரர் Goddess: சொர்ணபுரிநாயகியம்மை)
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர் கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே. | [1] |
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை, திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.063  
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருத்தென்குரங்காடுதுறை God: குலைவணங்குநாதர் Goddess: அழகுசடைமுடியம்மை)
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்- புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான் தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக் குரங்காடூதுறைக் கோலக் கபாலியே. | [1] |
நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் உற்ற நல்மொழியால் அருள்செய்த நல் கொற்றவன் குரங்காடுதுறை தொழ, பற்றும் தீவினை ஆயின பாறுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.064  
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கோழம்பம் God: கோகுலேசுவரர் Goddess: சவுந்தரியம்மை)
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய் ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்; கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்- தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. | [1] |
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய, அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள் அமரலோகம் அது ஆள் உடையார்களே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.065  
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பூவனூர் God: புஷ்பவனநாதர் Goddess: கற்பகவல்லியம்மை)
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார், பாவம் ஆயின பாறிப் பறையவே, தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே. | [1] |
நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன், வாரணன், குமரன், வணங்கும் கழல் பூரணன்திருப் பூவனூர் மேவிய காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.066  
ஓதம் ஆர் கடலின் விடம்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவலஞ்சுழி God: காப்பகத்தீசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன், பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை, மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை, பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே. | [1] |
இலங்கை வேந்தன் இருபது தோள் இற நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான், மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி வலம் கொள்வார் அடி என் தலைமேலவே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாஞ்சியம் God: வாஞ்சியநாதர் Goddess: வாழவந்தநாயகியம்மை)
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.068  
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநள்ளாறு God: தெர்ப்பாரணியர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள், தெள் ஆறாச் சிவசோதித்திரளினை, கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை நள்ளாறா! என, நம் வினை நாசமே. | [1] |
இலங்கை மன்னன் இருபது தோள் இற மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர், நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும் வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கருவிலிக்கொட்டிட்டை God: சற்குணநாதர் Goddess: சர்வாங்கநாயகியம்மை)
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப் பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர், கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக் கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே! | [1] |
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன், கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி, கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.070  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கொண்டீச்சரம் God: பசுபதீசுவரர் Goddess: சாந்தநாயகியம்மை)
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால் மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே, சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக் கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே! | [1] |
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான், குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.071  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவிசயமங்கை God: விசயநாதேசுவரர் Goddess: மங்கைநாயகியம்மை)
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ் வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே, இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே! | [1] |
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற விலங்கல் சேர் விரலான் விசயமங்கை வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும், நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநீலக்குடி God: நீலகண்டேசுவரர் Goddess: நீலநிறவுமையம்மை)
வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் செத்தபோது, செறியார் பிரிவதே; நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே. | [1] |
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால் நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும் இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமங்கலக்குடி God: புராணவரதேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு மங்கலக்குடி மேய மணாளனே. | [1] |
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன், தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து, அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.074  
விரும்பி ஊறு விடேல், மட
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவெறும்பூர் God: எறும்பீசுவரர் Goddess: நறுங்குழல்நாயகியம்மை)
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே! கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;- இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே. | [1] |
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும், நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட, மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்குரக்குக்கா God: கொந்தளக்கருணைநாதர் Goddess: கொந்தளநாயகியம்மை)
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர், சரக்குக் காவி, திரிந்து அயராது, கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக் குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே. | [1] |
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி, உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்- குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா; வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.076  
திருவின் நாதனும், செம்மலர் மேல்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கானூர் God: செம்மேனிநாயகர் Goddess: சிவயோகநாயகியம்மை)
திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே! | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருச்சேறை (உடையார்கோவில்) God: சென்னெறியப்பர் Goddess: ஞானவல்லியம்மை)
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்; கூரிது ஆய அறிவு கைகூடிடும்- சீரியார் பயில் சேறையுள் செந்நெறி நாரிபாகன்தன் நாமம் நவிலவே. | [1] |
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருக்கோடி (கோடிக்கரை) God: கோடீசுவரர் Goddess: வடிவாம்பிகையம்மை)
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.079  
வெள் எருக்கு அரவம் விரவும்
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) God: வைத்தியநாதர் Goddess: தையல்நாயகியம்மை)
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப் புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர், நள் இருப்பர், நரகக்குழியிலே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.080  
வானம் சேர் மதி சூடிய
Tune - திருக்குறுந்தொகை (Location: திருஅன்பில் ஆலந்துறை God: சத்திவாகீசர் Goddess: சவுந்தரநாயகியம்மை)
வானம் சேர் மதி சூடிய மைந்தனை நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை; ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக் கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே! | [1] |
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன், அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.081  
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருப்பாண்டிக்கொடுமுடி God: கொடுமுடிநாதேசுவரர் Goddess: பண்மொழியம்மை)
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர் பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி நட்டனை, தொழ, நம் வினை நாசமே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.082  
விண்ட மா மலர் கொண்டு
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவான்மியூர் God: மருந்தீசுவரர் Goddess: சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர், அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்! பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும், வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே. | [1] |
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச் சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்; ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும், வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.083  
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
Tune - திருக்குறுந்தொகை (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்; காணத் தான் இனியான் கடல் நாகைக்கா- ரோணத்தான் என, நம் வினை ஓயுமே. | [1] |
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன், வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை அடர ஊன்றிய, பாதம் அணைதர, தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.084  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
Tune - திருக்குறுந்தொகை (Location: மேலைத்திருக்காட்டுப்பள்ளி God: ஆரணியசுந்தரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம், காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே! | [1] |
எண் இலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன், கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர்தம் வினை நாசமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
Tune - திருக்குறுந்தொகை (Location: திருச்சிராப்பள்ளி God: தாயுமானேசுவரர் Goddess: மட்டுவார்குழலம்மை)
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார்; கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும் சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.086  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
Tune - திருக்குறுந்தொகை (Location: திருவாட்போக்கி (ரத்னகிரி) God: இரத்தினகிரீசுவரர் Goddess: சுரும்பார்குழலம்மை)
காலபாசம் பிடித்து எழு தூதுவர், பாலகர், விருத்தர், பழையார் எனார்; ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார் சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே. | [1] |
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே, அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார் கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.087  
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
Tune - திருக்குறுந்தொகை (Location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) God: மணவாளநாயகர் Goddess: யாழ்மொழியம்மை)
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே! | [1] |
கடுத்த மேனி அரக்கன், கயிலையை எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப் படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக் கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.088  
பெருகல் ஆம், தவம்; பேதைமை
Tune - திருக்குறுந்தொகை (Location: திருமருகல் God: மாணிக்கவண்ணர் Goddess: வண்டுவார்குழலி)
பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே. | [1] |
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று, சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும் ஆதியான், மருகல் பெருமான், திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.089  
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -தனித் திருக்குறுந்தொகை God: Goddess: )
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; ஒன்று கீள் உமையோடும் உடுத்தது- ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே. | [1] |
பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்; பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை; பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் பத்தியான் இடம் கொண்டது பள்ளியே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.090  
மாசு இல் வீணையும், மாலை
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -தனித் திருக்குறுந்தொகை God: Goddess: )
மாசு இல் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே- ஈசன், எந்தை, இணைஅடி நீழலே. | [1] |
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்; உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.091  
ஏ இலானை, என் இச்சை
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -தனித் திருக்குறுந்தொகை God: Goddess: )
ஏ இலானை, என் இச்சை அகம்படிக்- கோயிலானை, குணப் பெருங்குன்றினை, வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற தாய் இலானை, தழுவும், என் ஆவியே. | [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -காலபாசத் திருக்குறுந்தொகை God: Goddess: )
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே! | [1] |
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.093  
காசனை, கனலை, கதிர் மா
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை God: Goddess: )
காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே? | [1] |
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை, உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை, பருகு பாலனை, பால்மதி சூடியை, மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.094  
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,
Tune - திருக்குறுந்தொகை (Location: தொழற்பாலதே திருக்குறுந்தொகை God: Goddess: )
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு- முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்- துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே. | [1] |
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள் கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு- பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம் சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.095  
புக்கு அணைந்து புரிந்து அலர்
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை God: Goddess: )
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்; நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்; சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே. | [1] |
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்; விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்; அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக் கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.096  
பொன் உள்ளத் திரள் புன்சடையின்
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை God: Goddess: )
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே! | [1] |
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம், எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது, எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார், எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.097  
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை God: Goddess: )
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே. | [1] |
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.098  
நீறு அலைத்தது ஓர் மேனி,
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -உள்ளத் திருக்குறுந்தொகை God: Goddess: )
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை; தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர் ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே. | [1] |
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக் கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால் ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.099  
பாவமும் பழி பற்று அற
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை God: Goddess: )
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்! ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்! காவலாளன் கலந்து அருள்செய்யுமே. | [1] |
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்? பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக் குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 - Thirumurai
Pathigam 5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
Tune - திருக்குறுந்தொகை (Location: பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை God: Goddess: )
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின் நாயகன்; மாதவர் நாயகன்; ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்; பூதநாயகன் புண்ணியமூர்த்தியே. | [1] |
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள் பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்- கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே. | [10] |