மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால், நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்; சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத் தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.
|
1
|
சிவபெருமான்மேற் காதல் மிகுந்து , ` மனைக் கண் இரு ` என்று நான் கூறியபோது , ` எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை ?` என்று சொல்வதோடு , ` ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன் ` என்றும் கூறுகின்றனள் என் மகள் . | |
நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம் மிக்க தையலை வெள்வளை கொள்வது தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு தக்கது அன்று, தமது பெருமைக்கே.
|
2
|
நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து ` பலி இடுக ` என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று . | |
கெண்டை போல் நயனத்து இமவான் மகள் வண்டு வார்குழலாள் உடன் ஆகவே, துண்டவான்பிறைத் தோணிபுரவரைக் கண்டு காமுறுகின்றனள், கன்னியே.
|
3
|
கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள் . | |
பாலையாழ் மொழியாள் அவள் தாழ்சடை- மேலள் ஆவது கண்டனள்; விண் உறச் சோலை ஆர்தரு தோணிபுரவர்க்குச் சால நல்லள் ஆகின்றனள்-தையலே.
|
4
|
பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும் , விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப் பெண் . | |
பண்ணின் நேர் மொழியாள், பலி இட்ட இப் பெண்ணை, மால்கொடு பெய்வளை கொள்வது, சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை அண்ணலாருக்குச் சால அழகிதே?
|
5
|
சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ ? | |
| Go to top |
முல்லை வெண் நகை மொய்குழலாய்! உனக்கு அல்லன் ஆவது அறிந்திலை, நீ; கனித் தொல்லை ஆர் பொழில்-தோணிபுரவர்க்கே நல்லை ஆயிடுகின்றனை-நங்கையே!
|
6
|
முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் , வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே ! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை ; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை . | |
ஒன்றுதான் அறியார், உலகத்தவர்; நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்; துன்று வார் பொழில்-தோணிபுரவர்தம் கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே.
|
7
|
தலைவிக்குற்ற நோயின் காரணம் வேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார் ; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள் ; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும் . | |
உறவு பேய்க்கணம்; உண்பது வெண்தலை; உறைவது ஈமம்; உடலில் ஓர் பெண் கொடி; துறைகள் ஆர் கடல்-தோணிபுரத்து உறை இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே?
|
8
|
உறவு பேய்க்கூட்டங்கள் ; உண்பதோ வெண் தலையில் ; வாழ்வதோ சுடுகாட்டில் ; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி ; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள் ? | |
மாக யானை மருப்பு ஏர் முலையினர் போக, யானும் அவள் புக்கதே புக, தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே ஆக, யானும் அவர்க்கு-இனி ஆள் அதே.
|
9
|
மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன் . | |
இட்டம் ஆயின செய்வாள், என் பெண் கொடி- கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத் துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே.
|
10
|
என் பெண்கொடியாகிய மகள் , தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள் . | |
| Go to top |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|