கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்; அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்; எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்; செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
1
|
துதிக்கையையும் , பெருமையையும் மதத்தையும் உடைய யானைத் தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய் , கண் பொருந்திய நெற்றியை உடையவனாய் , எல்லாருக்கும் தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய் , எங்களுக்குத் தலைவனாய் , ஏழுலகும் பரந்தவனாய் , எரிகின்ற விளக்குப் போல்பவனாய் , விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச் செந்நிற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய் , என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான் காட்சி வழங்குகின்றான் . | |
ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்; ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்; அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்; மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்; தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
2
|
புலால் மணம் தங்கிய மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய் , ஓங்கார வடிவினனாய் , ஊழிகளுக்குத் தலைவனாய்க் காளையை இவர்பவனாய் , திருவையாற்றில் உறைபவனாய் , எல்லா உலகங்களும் பரவினவனாய் , அண்டங்களுக்கு அப்பாலும் பரவியவனாய் , கையில் மானை ஏந்திய நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான் . | |
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்; தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்; சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்; ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்; அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்; தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
3
|
திருவாரூரில் உள்ள பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன் . அவன் இறைவனாய் , மறை ஓதுபவனாய் , நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும் தூய ஒளியுடைய சூலப்படையினனாய் , சூரியன் சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய் , ஏற்றமுறையால் என்னை அடிமை கொண்டவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய் , அடியார்க்கு அமுதமாயினவன் . தீப் போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை உடையவனாவான் . அவன் என் சிந்தையான் . | |
கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்; கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்; எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்; ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்; பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்; பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்; செங்கண் வாள் அரா, மதியோடு உடன் வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
4
|
திருவாரூரில் உள்ள பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன் . கொடிய மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன் . எங்கள் துயரைப் போக்கும் தலைவன் . ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன் . அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன் . பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன் . அவன் என் சிந்தையான் . | |
கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்; போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்; புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்; நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்; நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்; சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
5
|
திருவாரூர்ப் பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன் . நீல கண்டன் . நெற்றிக்கண்ணன் . காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன் . புண்ணியன் , குணபூரணன் . நீர் சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன் . மாசற்றவன் . தன் நிகர் இல்லாதவன் . சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன் . அவன் என் சிந்தையான் . | |
| Go to top |
பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்; பிறப்பு இலிகாண்; பெண்ணோடு ஆண் ஆயினான்காண்; கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான்காண்; கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீகாண்; இறை உருவக் கனவளையாள் இடப்பாகன்காண்; இரு நிலன்காண்; இரு நிலத்துக்கு இயல்பு ஆனான்காண்; சிறை உருவக் களி வண்டு ஆர் செம்மையான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
6
|
திருவாரூர்ப் பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன் . பிறப்பற்றவன் . ஆண் , பெண் என்ற இருபகுப்பினை உடைய உருவத்தன் . நீலகண்டன் . வெண்ணீற்றன் . தன் திருவடிகளை வழிபடுபவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன் . கைகளில் பெரிய வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன் . பெரிய நிலமாகவும் அதனைத் தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன் . சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள் பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன் . அவன் என் சிந்தையுளான் . | |
தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர் உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்; அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ் ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்; கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்; கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்; சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
7
|
திருவாரூர்ப் பெருமான் தலையில் பொருந்துமாறு தலைமாலையைச் சூடியவன் . மக்களும் தேவரும் உள்ள உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன் . பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன் . சலந்தரனை அழித்தபிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன் . கொலைத் தொழிலைச் செய்யும் அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன் . ஐம்பூதங்களும் ஆகியவன் . வில்லிலிருந்து புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன் . அவன் என் சிந்தையானே . | |
ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல் மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்; வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்; வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்; செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
8
|
திருவாரூர்ப் பெருமான் தலைவனாய் , என்றும் இளையவனாய் , எல்லோருக்கும் ஆதியாய் , மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க் கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய் , வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த செஞ்சடையனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , அருச்சுனனுக்கு அருள் செய்தவனாய் , வெண்மை , செம்மை , கருமை என்ற எல்லா நிறங்களையும் உடையவனாய் என் சிந்தையில் உள்ளான் . | |
மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்; மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்; இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்; இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்; கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்; கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்; சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
9
|
திருவாரூர்ப் பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய் , இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர் மாலையைச் சூடியவனாய் , எல்லோருக்கும் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . முல்லை நிலத் தலைவனான திருமாலை இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன் . கொல்லும் முத்தலைச் சூலத்தை உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன் . அவன் என் சிந்தையான் . | |
பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்; புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்; மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்; மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்; எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்; செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
|
10
|
திருவாரூர்ப் பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன் . பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி , பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப் பூச்சூடி , ஒன்றாலும் குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும் நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . அவன் என் சிந்தையான் . | |
| Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|