பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள் இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர் தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த் தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்; இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.
|
1
|
நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே ! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர் . இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச் சிறிது , சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை . ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய் , எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரிய கடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன் . அழிந்து போகக் கூடியவர்களே ! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள் . | |
ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர்! ஈண்டு இவ் அவனி எல்லாம் உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே, நுகர் போகம்; யானேல், வானோர் உம்பரும் ஆய் ஊழியும் ஆய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல், வானோர்- தம் பெருமானாய் நின்ற அரனை, காண்பேன்; தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மி(ன்)னே!.
|
2
|
ஐம்பெரும் பூதங்களே ! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர் . உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்று மில்லை . ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி , வள்ளலாய்த் தேவர் தலைவனாய் , ஒளி பொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன் . உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள் . | |
சில் உருவில் குறி இருத்தி, நித்தல் பற்றி, செழுங் கணால் நோக்கும் இது ஊகம் அன்று; பல் உருவில்-தொழில் பூண்ட பஞ்சபூதப்-பளகீர்! உம் வசம் அன்றே! யானேல், எல்லாம் சொல் உருவின் சுடர் மூன்று ஆய், உருவம் மூன்று ஆய், தூ நயனம் மூன்று ஆகி, ஆண்ட ஆரூர் நல் உருவில் சிவன் அடியே அடைவேன்; நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்து நீர் நடமின்க(ள்)ளே!.
|
3
|
பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர் ! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது . இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா ? யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய் , அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய் , அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு , இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன் . உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன் . உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள் . | |
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள் மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு, ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர் பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை, புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை, தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!.
|
4
|
விரும்பி நினைக்கப்படும் உடலிலே , வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே ! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய உரு வினைத் தந்தவனாய் , அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய் , இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய் , என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன் . ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள் . | |
துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள் ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன் வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை, வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள் அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும் ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;.
|
5
|
நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே ! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று . ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய் , வைகல் என்ற தலத்தில் மணவாளனாய் , எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன் . ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன் . ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள் . | |
| Go to top |
பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே! உலோபமே! பொறையே! நீங்கள் உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல், அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச் செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச் செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!.
|
6
|
பெருமிதம் கொண்ட செருக்கே ! மாண்பு இழந்த மானமே ! காமமே ! பகையே ! கோபமே ! கஞ்சத்தனமே ! துன்பச் சுமைகளே ! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித் திரிவது உங்களுக்கு அரிது அன்று . ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி , எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன் . உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன் . | |
இடர், பாவம் என, மிக்க துக்க, வேட்கை, வெறுப்பே, என்று அனைவீரும் உலகை ஓடிக் குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே? யானேல், வானோர்- அடையார் தம் புரம் மூன்றும் எரிசெய்தானை, அமரர்கள் தம் பெருமானை, அரனை, ஆரூர் உடையானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.
|
7
|
துன்பங்களே ! பாவங்களே ! மிக்க துயரம் தரும் வேட்கையே ! வெறுப்பே ! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா ? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன் . உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்தி நும் வசப்படுத்த முயலாதீர்கள் . | |
விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் நிரந்து ஓடி மா நிலத்தை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, நுகர் போகம்? யானேல், வானோர் கரைந்து ஓட வரு நஞ்சை அமுதுசெய்த கற்பகத்தை, தற்பரத்தை, திரு ஆரூரில் பரஞ்சோதிதனை, காண்பேன்; படேன், நும் பண்பில்; பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்மி(ன்)னே!.
|
8
|
விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே ! செல்வமே ! கொடிய கோபமே ! மகிழ்ச்சியே ! வெறுப்பே ! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள் . உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா ? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய் , உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன் . உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன் . விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள் . | |
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச- முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர் நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர் ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.
|
9
|
தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே ! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா ? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன் . உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள் . | |
சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித் துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச் செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க, தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்) இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.
|
10
|
சுருக்கமே ! பெருக்கமே ! காலநிலையே ! செல்வமே ! வறுமையே ! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன் . அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள் . | |
| Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|