இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்! என்றும், சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ! என்றும், தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா! என்றும், கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா! என்றும், கலைமான் மறி ஏந்து கையா! என்றும், அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
|
1
|
நெஞ்சே ! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள் . செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே ! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே ! திருநீறணிந்த தோளனே ! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே ! மான் குட்டியை ஏந்திய கையனே ! ஆற்றலுடைய காளை வாகனனே ! கிட்டுதற்கரிய அமுதே ! எல்லோருக்கும் முற்பட்டவனே ! ஆரூரனே ! எனப்பலகாலும் அழைப்பாயாக . | |
செடி ஏறு தீ வினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே, நெஞ்சமே! திண்ணம் ஆகப் பொடி ஏறு திருமேனி உடையாய்! என்றும், புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா! என்றும், அடியேனை ஆள் ஆகக் கொண்டாய்! என்றும், அம்மானே! ஆரூர் எம் அரசே! என்றும், கடி நாறு பொழில் கச்சிக் கம்பா! என்றும், கற்பகமே! என்று என்றே, கதறா நில்லே!.
|
2
|
நெஞ்சமே ! துன்பம் மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே ! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே ! அடியேனை அடிமையாகக் கொண்டவனே ! தலைவனே ! ஆரூரில் உள்ள எம் அரசனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே ! கற்பகமே ! என்று பலகாலும் அழைப்பாயாக . | |
நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு, பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, சங்கரா, சய! போற்றி போற்றி! என்றும், அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
|
3
|
நெஞ்சே ! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் ` சங்கரா நீ வெல்க வாழ்க !` என்றும் ` கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே !` என்றும் ` ஆரூரா !` என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக . | |
புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே! இது கண்டாய்; பொருந்தக் கேள், நீ: நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா! என்றும், நுந்தாத ஒண்சுடரே! என்றும், நாளும் விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி எண்ண (அ)ரிய திருநாமம் உடையாய்! என்றும், எழில் ஆரூரா! என்றே ஏத்தா நில்லே!.
|
4
|
நெஞ்சமே ! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள் . பூணூல் அணிந்த மார்பனே ! தூண்ட வேண்டாத விளக்கே ! தேவர்களும் நால்வேதங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே ! அழகிய ஆரூரனே ! என்று பலகாலும் துதிப்பாயாக . | |
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்; இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி, பிழைத்தது எலாம் பொறுத்து அருள் செய் பெரியோய்! என்றும், பிஞ்ஞகனே! மைஞ் ஞவிலும் கண்டா! என்றும், அழைத்து அலறி, அடியேன் உன் அரணம் கண்டாய், அணி ஆரூர் இடம் கொண்ட அழகா! என்றும், குழல் சடை எம் கோன்! என்றும், கூறு, நெஞ்சே! குற்றம் இல்லை, என்மேல்; நான் கூறினேனே.
|
5
|
நெஞ்சே ! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால் இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்து வாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே ! தலைக்கோலம் உடையவனே ! நீலகண்டனே ! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன் . ஆரூர் உறையும் அழகா ! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே ! என்றும் கூப்பிடு . உனக்கு இவ்வாறு உப தேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது . செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே . | |
| Go to top |
நீப்ப(அ)ரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்; நெஞ்சே! நித்தம் ஆகச் சேப் பிரியா வெல் கொடியினானே! என்றும், சிவலோக நெறி தந்த சிவனே! என்றும், ‘பூப் பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் புண்டரிகக் கண்ணானும், போற்றி! என்னத் தீப்பிழம்பு ஆய் நின்றவனே! செல்வம் மல்கும் திரு ஆரூரா!’ என்றே சிந்தி, நெஞ்சே!.
|
6
|
நெஞ்சே ! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன் . நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே ! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே ! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கு பவனே ! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் ` நெஞ்சே நீ நினை `. | |
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில், பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில், சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில், சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்! உற்றவரும் உறு துணையும் நீயே என்றும், உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும், புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா! என்றும், பொழில் ஆரூரா! என்றே, போற்றா நில்லே!.
|
7
|
நெஞ்சே ! நான் சொல்வதனைக் கேட்பாயாக . நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால் , மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால் , உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால் , செயலற்று இராமல் நான் சொல்வதைக் கேள் , எனக்கு உறவினரும் துணையும் நீயே , உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன் . புற்றில் வாழத்தக்க பாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே ! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே ! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக . | |
மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி ஆவது இது கண்டாய்; வானோர்க்கு எல்லாம் அதிபதியே! ஆரமுதே! ஆதீ! என்றும்; அம்மானே! ஆரூர் எம் ஐயா! என்றும்; துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் சூழும் வலம் செய்து தொண்டு பாடி, கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா! கற்பகமே! என்று என்றே கதறா நில்லே!.
|
8
|
நெஞ்சமே ! உனக்கு நான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன் . பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே . தேவர்கள் தலைவனே ! அரிய அமுதமே ! ஆதியே ! என்றும் , தலைவனே ! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும் , அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி , அவன் கோயிலை வலம் செய்து , தொண்டர்களையும் துதித்து , ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே ! காலனுக்கும் காலனே ! கற்பகமே ! என்றும் பலகாலும் கதறுவாயாக . | |
பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே! பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா! தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு ஆரூர்த் திருமூலட்டானா! என்றும், நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று, ஏசற்று நின்று, இமையோர் ஏறே! என்றும், எம்பெருமான்! என்று என்றே ஏத்தா நில்லே!.
|
9
|
நெஞ்சே ! மேம்பட்ட சோதியே ! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே ! பாவத்தைப் போக்குபவனே ! உலகுக்கே ஒளிதரும் விளக்கே ! தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே ! தேவர்கள் தலைவனே ! எம்பெருமானே ! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக . இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம் . | |
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது, நெஞ்சே! சலம் கொள் சடைமுடி உடைய தலைவா! என்றும், தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய்! என்றும், இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா! என்றும், எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய்! என்றும், நலம் கொள் அடி என் தலைமேல் வைத்தாய்! என்றும், நாள்தோறும் நவின்று ஏத்தாய்! நன்மை ஆமே.
|
10
|
நெஞ்சே ! ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து , மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல் , என்பக்கம் வந்து யான் சொல்வதனைக் கேள் . கங்கையைச் சடையில் சூடிய தலைவா ! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே ! இராவணன் தலைகளை நெரித்த தலைவனே ! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே ! உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே ! என்று நாள்தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக . அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும் . | |
| Go to top |
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|