உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
1
|
தேவர்களுக்கு அரசனே! எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே! அழுக்கு உடம்பை உடையேனாகிய எனக்குப் புதிய பொருள்போலத் தோன்றி என் குடி முழுவதும் ஆண்டருளி, உலக வாழ்வு நீங்க சிவப்பேறு உண்டாகும்படி வாழ்வித்த அமுதமே! துணியப்பட்ட செம்பொருளே! சிறப்பை யுடைய திருவடியையுடையவனே! அருட் செல்வமாயிருப்பவனே! சிவபிரானே! எங்கள் பொருட்டாக உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது? | |
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
2
|
இடபத்தை விடாமல் விரும்பின தேவர் பெரு மானே! வினையை உடையேனாகிய என் உண்மையான பொருளே! அடியேன் புலால் நாற்றம் நீங்காது முழுவதும் புழு நிறைந்த கூட்டினிற் கிடந்து, மிகவும் மூப்பு எய்திப் பாழாய்க் கீழ்மையடையா வகை தடுத்து என்னை ஆண்டருளின கருணையாகிய பெருங்கடலே! இடை யறாமல் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந் தருளிச் செல்வது?. | |
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
3
|
தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து காலத்தை வீணாகக் கழிக்கின்ற புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, மிக மேன்மையான சிவபதத்தைக் கொடுத்தருளின அருட்செல்வமே! சிவபிரானே! இவ்வுலகிலேயே உன்னை உறுதி யாகப் பற்றினேன், நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?. | |
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
4
|
அளியையுடைய சுடரே! பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! பேராற்றலையுடைய அருமையான தவத்தினையுடை யோர்க்கு, அரசனே! மெய்ப் பொருளை விளக்கும் நூலானவனே! நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! யோகக் காட்சியில் விளங்குகின்றவனே! தெளிவாகிய இடத்தையுடைய அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே! சிவபிரானே! இருள் நிறைந்த இவ் வுலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது. | |
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
5
|
உனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒருத்தனே! அடி யேனது மனத்தில் விளங்குகின்ற ஒளியே! உண்மையான நிலையை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத் ததாகிய ஒப்பற்ற அன்பானவனே! சொல்வதற்கு அருமையான வளமையான சுடர் வடிவினனே! அருட் செல்வமே! சிவபிரானே! இளைத்த இடத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கு எழுந் தருளிச் செல்வது?. | |
| Go to top |
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
6
|
ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட்கொண்டு எல்லையற்ற இன்பத்தை அளித்து என்னுடைய பிறப்பின் வேரைக் களைந்து என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட தலைக்கோலம் உடையவனே! பெருமை யான எமது மெய்ப்பொருளே! திறந்த வெளியிலே காணப்பட்ட காட்சிப் பொருளே! அடியேனது அருட்செல்வமே! சிவபிரானே! இறுதியிலே, உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?. | |
பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
7
|
பற்றுக்களின் வேரைக் களைகின்ற பழமையான பொருளே! பற்றிக் கொள்கின்ற வழியை, அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, எனது வழிபாட்டினை விரும்பி, என் சித்தத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய மெய்ப்பொருளே! ஒளியையுடைய விளக்கே! விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே! அருட்செல்வமே! சிவபிரானே! இறைவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?. | |
அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
8
|
தந்தையே! தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற முதல்வனே! சிறிதும் முடிவு இல்லாத ஞானவடிவினனே! அடியார்கள் உறுதியாகப் பற்றின அருட் செல்வமே! சிவபிரானே! அன்பர் பால் பேரன்பு கொண்டவனே! எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும் நீங்கி, அவையல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற மாயம் உடையவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?. | |
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
9
|
பாலை, காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதி யாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?. | |
புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்
என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!
துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!
இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
|
10
|
அற்பமாகிய புலால் உடம்பு, மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியையுடைய அது, பொன்னாலாகிய பெரிய கோயிலாகும் படி, அதனுள் எழுந்தருளியிருந்து, என்னுடைய எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து, எளியவனாகி ஆட்கொண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! துன்பமும் பிறப்பும் இறப்பினோடு மயக்கமும் ஆகிய பற்றுக்களெல்லாம் அறுத்தருளின மேலான சோதியே! ஆனந்தமே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?. | |
| Go to top |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|