கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.
|
1
|
மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ? | |
ஒன்றினொடு ஒன்றும், ஒர் ஐந்தினொடு ஐந்தும், உயிர்ப்பதும் ஆகாதே?
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே?
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு அதும் ஆகாதே?
காரணம் ஆகும் மன ஆதி குணங்கள் கருத்து உறும் ஆகாதே?
நன்று, இது, தீது, என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே?
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல, நண்ணுதும் ஆகாதே?
என்றும் என் அன்பு நிறைந்த பராஅமுது எய்துவது ஆகாதே?
ஏறு உடையான், எனை ஆளுடை நாயகன், என்னுள் புகுந்திடிலே!
|
2
|
இடபவாகனத்தை உடையவனும், என்னை அடிமையாகவுடைய தலைவனுமாகிய சிவபெருமான் என்னுள்ளே புகுவானாயின், உயிரோடு உடம்பும் ஒப்பற்ற ஐம்பொறிகளோடு ஐம்புலன்களும் கலந்து உயிர்க்கும் தன்மை அறுதல் ஆகாது போகுமோ? இறைவனே! உன் அடியார்க்கு அடியோம் என்று சொல்லித் துன்பங்கள் பலவும் நீங்குதல் ஆகாது போகுமோ? கன்றை எண்ணி எழுகின்ற தாய்ப் பசுவைப் போல இறைவன் முன் வந்து உருகுகின்ற தன்மை ஆகாது போகுமோ? எல்லாச் செயல்களுக்கும் காரணமாகிய இறைவனுடைய குணங்கள் என் மனத்தில் பொருந்துதல் ஆகாது போகுமோ? இது நல்லது இது தீயது என்று ஆராய்ந்து அதனால் உண்டாகிய மனக் கலக்கம் நீங்குதல் ஆகாது போகுமோ? முன்னைய அடியார்களுடன் வீட்டுலகிற் சென்று சேர ஒன்று கூடுவதும் ஆகாது போகுமோ? எந்நாளும் எனது அன்பு நிறைந்த மேலான அமுதம் அடைவது ஆகாது போகுமோ? | |
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே?
பாவனை ஆய கருத்தினில் வந்த பரா அமுது ஆகாதே?
அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே?
ஆதி முதல் பரம் ஆய பரம் சுடர் அண்ணுவது ஆகாதே?
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே?
சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே?
இந்திரஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே?
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே!
|
3
|
என்னுடைய தலைவனாகிய ஈசன் எதிரே தோன்று வனாயின் பாசத் தொடர்பினால் உண்டாகும் மாறுபட்ட குணங்கள் அழிவதும் ஆகாது போகுமோ? பாவனை செய்கின்ற மனத்தினில் ஊறுகின்ற மேலான அமுதம் ஆகாது போகுமோ? எல்லையில்லாத உலகப் பொருள்களும் நமது உள்ளத்தில் அகப்படுதல் ஆகாது போகுமோ? எல்லாவற்றிக்கும் முதலான பரஞ்சுடர் நெருங்கும்படி ஆகாது போகுமோ? மிகச் சிவந்த வாயினையுடைய பெண்களால் வரும் துன்பங்களானவை ஒழிந்து போதல் ஆகாது போகுமோ? சேல் மீன் போன்ற கண்கள் அவனது திருமேனி அழகில் ஈடுபடுதல் ஆகாது போகுமோ? இந்திர சாலம் போன்ற மயக்குகின்ற பிறவித் துன்பம் ஒழிதல் ஆகாது போகுமோ? | |
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து, உடன் இன்புறும் ஆகாதே?
எல்லை இல் மாக் கருணைக் கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே?
நல் மணி நாதம் முழங்கி, என் உள் உற, நண்ணுவது ஆகாதே?
நாதன் அணித் திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே?
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே?
மா மறையும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!
|
4
|
என்னை ஆளாக உடைய பெருமானும், அருளு கின்ற ஈசனும் ஆகிய இறைவன் எழுந்தருளி வரப் பெற்றால் என்னுடைய அழகு பொருந்திய தனங்கள் இறைவனது திருமார்போடு பொருந்தி உடனாக இன்புறுதல் ஆகாது போகுமோ? பெரிய கருணைக் கடல் இனிது இன்பமாக ஆடுவதும் ஆகாதே போகுமோ? நல்ல மணி ஓசை என் உள்ளத்திலே பொருந்த அதனை நான் அடைதல் ஆகாது போகுமோ? இறைவனது அழகிய திருநீற்றை நாள்தோறும் அணிவது ஆகாது போகுமோ? நிலை பெற்ற அன்பரில் எனது பணி யானது முற்பட நிகழ்வது ஆகாது போகுமோ? பெருமை பொருந்திய வேதங்களும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்குதலும் ஆகாது போகுமோ? இனிய தன்மையுடைய செங்கழு நீர்மலர் மாலை, என்மேல் பொருந்துதல் ஆகாது போகுமோ? | |
மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே?
வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே?
காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே?
பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே?
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே?
எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!
|
5
|
என்னை ஆளாக உடைய பெருமானும் அருளு கின்ற ஈசனுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் உலகினில் மாயா காரியங்களை விரும்பிச் செய்ததனால் உண்டாகிய மயக்க உணர்ச்சியறுதலும் ஆகாது போகுமோ? தேவரும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடியை வழிபடுதல் ஆகாது போகுமோ? ஆணவ இருளில் அழுந்தி அழிவில்லாது கிடந்த காலம் முழுவதினும் வந்த கலக்கமானது அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? அன்பு செய்கின்ற அடியவரது மனமானது இப்பொழுது களிப்புற்றிருத்தல் ஆகாது போகுமோ? பெண் அலி ஆண் என்றும் நிலம், நீர் என்றும், உண்டாகிய மாறுபாடு அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? பெயர் களை அறியாத பல பிறவிகளினின்றும் தப்புதல் முடியாது போகுமோ? எண்ணிலாத அற்புதச் செயல்கள் வந்து என்னை அடைதல், ஆகாது போகுமோ? | |
| Go to top |
பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே?
பூ மழை, மாதவர் கைகள் குவிந்து, பொழிந்திடும் ஆகாதே?
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே?
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே?
தன் அடியார் அடி என் தலைமீது தழைப்பன ஆகாதே?
தான் அடியோமுடனே உய வந்து, தலைப்படும் ஆகாதே?
இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும் ஆகாதே?
என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே!
|
6
|
என்னை முன்னே ஆளாகவுடைய ஈசனும், தந்தையுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் பொன்னிறம் பொருந்திய திருமேனியில் திருவெண்ணீறு விளங்கித் தோன்றுதல் ஆகாது போகுமோ? பெரிய முனிவர்களுடைய கைகள் குவிக்கப் பெற்று மலர் மாரியைப் பெய்தல் ஆகாது போகுமோ? மின்னலைப் போன்று நுட்பமான இடையை உடைய பெண்ணினது வஞ்சனை யான எண்ணம் வெளிப்படுதல் ஆகாது போகுமோ? வீணையானது முழங்குதலால் உண்டாகின்ற ஒலியைப் போன்ற இன்பமானது மிகுந்திடுதல் ஆகாது போகுமோ? அவன் அடியாருடைய திருவடிகள் என் தலை மீது விளங்குதல் ஆகாது போகுமோ? அடியோங்கள் உய்தி பெறும்படி, தான் எழுந்தருளி வந்து எங்களுடன் கலத்தல் ஆகாது போகுமோ? எவ்விடத்தும் இனிய ஓசைகள் நிறைந்து இனிமையாக ஒலித்தல் ஆகாது போகுமோ? | |
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே?
துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே?
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பரா பரம் ஆகாதே?
பண்டு அறியாத பர அனுபவங்கள் பரந்து எழும் ஆகாதே?
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே?
விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப் பொருள் ஆகாதே?
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே?
இந்து சிகாமணி எங்களை ஆள, எழுந்தருளப் பெறிலே!
|
7
|
சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆளும்பொருட்டு எழுந்தருளப் பெற்றால் சொல்லுவதற்கு முடியாதபடி உண்டாகின்ற, தூய்மையான மணி ஓசை இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? மிக விரைவாக, என் உள்ளத்தில் பொருந் திய சோதி இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ? பல வகையான மன அலைவு கெடும்படி வந்தருளின, பரம்பொருளினது பயன் உண்டாகாது, போகுமோ? முற்காலத்திலும் அறிந்திராத மேலான அனுபவங்கள் விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ? வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண் களது ஆசை போன்றதோர் ஆசை, இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ? தேவரும் அறியாத மேன்மையான பொருள் இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? வரம்பு இல்லாதனவாகிய எண் குணங்களானவை என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ? | |
சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே?
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே?
அங்கு இது நன்று, இது நன்று, எனும் மாயை அடங்கிடும் ஆகாதே?
ஆசை எலாம், அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே?
செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே?
சீர் அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே?
எங்கும் நிறைந்து, அமுது ஊறு, பரம்சுடர் எய்துவது ஆகாதே?
ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே!
|
8
|
முடிவு அறியப்படாத, மறையோனாகிய இறைவன், என்னை ஆளும் பொருட்டு எழுந்தருளப் பெற்றால் பல சங்குகள் ஒன்று சேர்ந்து முழங்கினால் எழுகின்ற ஓசையில் விளையும் இன்பம் போன்றதோர் இன்பம், மிகுதிப்படுதல் ஆகாது போகுமோ? பிறந்த இனம் பற்றி விடாது வருகிற தன்மைகள் நம்மிடம் இருந்து நீங்குதலும் ஆகாது போகுமோ? அப்பொழுது, இது நன்று, இது நன்று எனும் மயக்கம் தணிதல் ஆகாது போகுமோ? ஆசை முழுவதும் யாம் இறைவன் அடியார்க்கு அடியோம் என்னும் அவ்வளவே ஆகாது போகுமோ? சிவந்த கயல் மீன் போன்ற ஒளிமிக்க கண்களை உடைய, பெண்களது மனமானது நன்கு விளங்குதல் ஆகாது போகுமோ? சிறப்பினையுடைய அடியார்களது சிவாநுபவங்களை உணர்தல் ஆகாது போகுமோ? எவ்விடத்தும் நிறைந்து பேரின்பத்தைப் பொழிகின்ற மேலான சோதியை அடைதல் ஆகாது போகுமோ? | |
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|