சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சண்பைநகர் (சீர்காழி) - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk   Add audio link Add Audio

பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
அங்கமாறு மறைநான்கவையு மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே.

1

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே.

2

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே.

3

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர் திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியி னுரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே.

4

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுத மருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லை யெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே.

5
Go to top

மாகரஞ்சே ரத்தியின்றோல் போர்த்து மெய்ம்மாலான
சூகரஞ்சே ரெயிறுபூண்ட சோதியன் மேதக்க
ஆகரஞ்சே ரிப்பிமுத்தை யந்தண் வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே.

6

இப்பாடல் கிடைக்கவில்லை.

7

இருளைப்புரையு நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யு மம்மானேரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையாற்
றரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே.

8

மண்டான்முழுது முண்டமாலு மலர்மிசை மேலயனும்
எண்தானறியா வண்ணநின்ற விறைவன் மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே.

9

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளு நிமல னிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சண்பைநகர் (சீர்காழி)
1.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பங்கம் ஏறு மதி சேர்
Tune - தக்கேசி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
3.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம் தமது சிந்தை பிரியாத
Tune - சாதாரி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000