வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லியமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே
|
1
|
வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வம்முடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே மைதி கழ்தரு மாமணி கண்டனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
2
|
மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே மறியு லாங்கையின் மாமழு வாளனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
3
|
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும் செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
4
|
அந்த ணாளர் புரியு மருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
5
|
| Go to top |
வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டி லானை யுரித்தவெங் கள்வனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
6
|
அழல தோம்பு மருமறை யோர்திறம் விழல தென்னு மருகர் திறத்திறம் கழல வாதுசெ யத்திரு வுள்ளமே தழலி லங்கு திருவுருச் சைவனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
7
|
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத் தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய் ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
8
|
நீல மேனி யமணர் திறத்துநின் சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே மாலு நான்முக னுங்காண் பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
9
|
அன்று முப்புரஞ் செற்ற வழகநின் துன்று பொற்கழல் பேணா வருகரைத் தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே கன்று சாக்கியர் காணாத் தலைவனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே.
|
10
|
| Go to top |
கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு வாடன் மேனி யமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
|
11
|
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|