வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
|
1
|
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
|
2
|
இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங் கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.
|
3
|
திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
|
4
|
ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய் தப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. |
5
|
| Go to top |
பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர் ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 3,
|
6
|