பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே.
|
1
|
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
|
2
|
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப் பரிசு பெறுமது பத்திரா சனமே.
|
3
|
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித் தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற் குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.
|
4
|
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக் கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச் சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
|
5
|
| Go to top |
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும் உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே. 5,
|
6
|