தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
|
1
|
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
|
2
|
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.
|
3
|
வருக்கம் சுகமாம் பிரமமு மாகும் அருக்கச் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.
|
4
|
மலையுமனோ பாவம் மருள்வன வாவ நிலையின் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம் சித்த மாகும் நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.
|
5
|
| Go to top |
சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு) ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து) ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே. 4,
|
6
|